ஏலத்தில் இளவரசி டயானாவின் பிளாக் ஷீப் ஸ்வெட்டர் - இரண்டரை கோடி வரை எதிர்பார்ப்பு
இளவரசி டயானாவின் பிளாக் ஷீப் ஸ்வெட்டர் ஏலத்திற்கு விடப்பட்டது. இலங்கை பணமதிப்பில் இந்த ஆடைக்கு கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் வரை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலத்தில் இளவரசி டயானாவின் பிளாக் ஷீப் ஸ்வெட்டர்
இளவரசி டயானாவின் புகழ்பெற்ற 'பிளாக் ஷீப்' ஸ்வெட்டர் ஏலத்திற்கு வந்துள்ளது. நியூயார்க்கைச் சேர்ந்த கலை நிறுவனமான Sotheby's ஏலம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஏலம் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெறும். இதன் ஆரம்ப விலை 50,000 அமெரிக்க டொலராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏலத்தில் இந்த ஆடை 80,000 டொலருக்கு மேல் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Getty Images
நிச்சயதார்த்தத்திற்கு பிறகு டயானா முதல் முறையாக அணிந்தார்
பிரித்தானியாவின் தற்போதைய மன்னராக இருக்கும் சார்லஸுடன் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு இளவரசி டயானா 1981-ம் ஆண்டு முதல் முறையாக இந்த ஸ்வெட்டரை அணிந்தார்.
அந்த சிகப்பு நிற ஸ்வெட்டர் முழுக்க வெள்ளை ஆட்டுக்குட்டிகள் இருக்கும், ஆனால் அதில் ஒரு ஆடு மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும்.
Getty Images
இந்த ஆடையின் வடிவமைப்பிற்குப் பின்னால் டயானாவின் ஆளுமை உள்ளது, இது எப்போதும் அரச குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வேறுபட்டது. இந்த ஸ்வெட்டரை சாலி முயர் மற்றும் ஜோனா ஆஸ்போர்ன் இளவரசி டயானாவுக்காக வடிவமைத்தனர்.
'சில கிளாசிக் விண்டேஜ் டிசைன்களைத் தேடிக்கொண்டிருந்தோம். இதற்கிடையில், இளவரசி டயானாவின் கருப்பு ஷீப் ஸ்வெட்டர் நம் வசம் வருகிறது" என்று Sotheby's கூறியது.
Getty Images
Princess Diana, Black Sheep Sweater, Auction
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |