பல கோடிகளுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட பிரித்தானிய இளவரசி டயானாவின் கார்... வெளியாகியுள்ள அரிய புகைப்படங்கள்!
பிரித்தானிய இளவரசி டயானாவின் கார் ஏலத்தில் விற்பனை.
40,000 கிமீ மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஃபோர்டு எஸ்கார்ட் கார் 8,66,000 டொலருக்கு விற்பனை.
பிரித்தானிய இளவரசி டயானாவின் பிளாக் ஃபோர்டு எஸ்கார்ட் கார் ஏலத்தில் சுமார் 8,66,000 டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய இளவரசி டயானா கடந்த 1985ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை பயன்படுத்திய நீல நிறப் பட்டையுடன் கூடிய கருப்பு நிற ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ எஸ்1 கார் பிரித்தானியாவின் வார்விக்ஷயரில் உள்ள சில்வர்ஸ்டோன் ஏலத்தில் வந்தது.
வெறும் 24,961 மைல்கள் (40,000 கிமீ) தூரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருந்த டயானாவின் காரை வாங்க, துபாய், யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த ஏலதாரர்கள் ஏலத்தில் கடுமையாக போராடினர்.
இறுதியில் பிரித்தானியாவில் உள்ள உயர் சந்தை கிராமமான ஆல்ட்ர்லி எட்ஜிலிருந்து வாங்குபவருக்கு கார் சுமார் தோராயமாக £8,66,000க்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
இந்த ஏலமானது இளவரசி டயானாவின் 25வது ஆண்டு நினைவு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!
தி கிரவுன் நெட்ஃபிக்ஸ் தொடரின் வெற்றியால் தூண்டப்பட்ட டயானாவின் வாழ்க்கையின் மீதான ஆர்வம் அவரது மரணத்திற்கு ஒரு கால் நூற்றாண்டுக்குப் பிறகும் அதிகமாக இருப்பதால் விற்பனை விலை அதிகமாக உயர்ந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.