அரச குடும்பத்தின் முதல் பெண்., டென்மார்க் ராணுவத்தில் இணைந்த இளவரசி இசபெல்லா

Denmark Europe
By Thiru Aug 05, 2026 10:51 PM GMT
Report

அரச குடும்பத்தில் இருந்து ராணுவ சேவையில் ஈடுபடும் முதல் இளவரசி என்ற பெருமையை இசபெல்லா பெற்றுள்ளார்.

11 மாத கால இராணுவ சேவை

டென்மார்க் நாட்டின் இளவரசி இசபெல்லா(Princess Isabella) தன்னுடைய 11 மாத இராணுவ சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார்.

ஸ்லாகல்ஸ் நகரில் அமைந்துள்ள ஆண்ட்வோர்ஸ்கோவ்(Antvorskov Barracks) பீரங்கி படை தளத்தில் ஆகஸ்ட் 3ம் திகதி 19 வயது இளவரசியான இசபெல்லா தன்னுடைய இராணுவ கடமைக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அரச குடும்பத்தின் முதல் பெண்., டென்மார்க் ராணுவத்தில் இணைந்த இளவரசி இசபெல்லா | Princess Isabella Joins Denmark Military Service

இதன் மூலம் டென்மார்க் அரச குடும்பத்தில் கட்டாய இராணுவ பணியில் ஈடுபடும் முதல் பெண் என்ற பெருமையை இளவரசி இசபெல்லா பெற்றுள்ளார்.

லண்டனில் 4 ஆண்களுக்கு நடந்த கத்திக்குத்து: 47 வயதுடைய பெண் ஒருவர் கைது

லண்டனில் 4 ஆண்களுக்கு நடந்த கத்திக்குத்து: 47 வயதுடைய பெண் ஒருவர் கைது

சகோதரனை பின்தொடரும் இளவரசி

மன்னர் பிரெடெரிக் எக்ஸ் மற்றும் ராணி மேரி ஆகியோரின் மூத்த மகளான இளவரசி இசபெல்லா, தன்னுடைய உயர்நிலைப் பள்ளியை முடித்துவிட்டு கோடைக்கால விடுமுறைக்கு பிறகு நேரடியாக கட்டாய இராணுவ சேவைக்காக இராணுவ முகாமிற்கு வந்து சேர்ந்துள்ளார்.

தன்னுடைய மூத்த சகோதரரும், பட்டத்து இளவரசருமான கிறிஸ்டியன், இராணுவ சேவையை தொடங்கிய அதே ராணுவ முகாமில் இளவரசி இசபெல்லாவும் இணைந்துள்ளார்.

அரச குடும்பத்தின் முதல் பெண்., டென்மார்க் ராணுவத்தில் இணைந்த இளவரசி இசபெல்லா | Princess Isabella Joins Denmark Military Service

பட்டத்து இளவரசர் கிறிஸ்டியன் இந்த இராணுவ முகாமில் பயிற்சியை முடித்துவிட்டு தற்போது இரண்டாம் லெப்டினன்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

டென்மார்க் அரச குடும்பத்தில் இராணுவ சேவை என்பது பாரம்பரியமாக கடைபிடித்து வந்தாலும், புதிதாக விரிவாக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் இராணுவ சேவையை நிறைவு செய்யும் முதல் அரச குடும்ப பெண் என்ற பெருமையை இளவரசி இசபெல்லா பெற்றுள்ளார்.

அத்துடன் இளவரசி இசபெல்லா எந்தவொரு ஊதியமும் இல்லாமல் இந்த இராணுவ சேவையை செய்ய தீர்மானித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US