புதிய பொறுப்பொன்றை ஏற்றுள்ள பிரித்தானிய இளவரசி கேட்
Princess of Wales becomes patron of leading cancer treatment hospital after her own fight with the disease: பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், பிரபல புற்றுநோய் மருத்துவமனை ஒன்றின் புரவலராக பொறுப்பேற்றுள்ளார்.
பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன், மான்செஸ்டரில் உள்ள புகழ்பெற்ற, தி கிறிஸ்டி (The Christie) புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மற்றும் அதன் அறக்கட்டளையின் புதிய புரவலராக (Patron) பொறுப்பேற்றுள்ளார்.
பின்னணி
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

தனது சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த இளவரசி கேட், கடந்த ஜூன் மாதம், மான்செஸ்டரில் உள்ள தி கிறிஸ்டி புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு நேரில் சென்று நோயாளிகள் மற்றும் மருத்துவர்களைச் சந்தித்தார்.
இந்நிலையில், இளவரசி கேட்டுக்கு, அதே கிறிஸ்டி புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மற்றும் அதன் அறக்கட்டளையின் புதிய புரவலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, கிறிஸ்டி மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவ சிகிச்சையையும் தாண்டி அன்பும் ஆதரவும் நோயாளிகளுக்கு எவ்வாறு நம்பிக்கையளிக்கிறது என்பதை நேரில் கண்டேன்.
இந்த அற்புதமான அமைப்பின் புரவலராகப் பொறுப்பேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இளவரசி கேட் தெரிவித்துள்ளார்.
இளவரசி கேட், ஏற்கனவே லண்டனில் உள்ள ராயல் மார்ஸ்டன் (Royal Marsden) புற்றுநோய் மருத்துவமனையின் இணை புரவலராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த ராயல் மார்ஸ்டன் மருத்துவமனையில்தான் இளவரசி கேட் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.