இளவரசர் வில்லியமை திருமணம் செய்வதற்கு முன்பே மகாராணியாரின் அலுவலகத்துக்குள் சென்ற இளவரசி கேட்
கேட் மிடில்டன் இளவரசர் வில்லியமை திருமணம் செய்யும் முன் வரை ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண பெண்தான்.
கல்லூரியில் படிக்கும்போது வில்லியமும் கேட்டும் காதலித்து, குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.
அப்போதுதான் கேட் ராஜ குடும்ப உறுப்பினரானார்.
திருமணத்துக்கு முன்பே கேட்டுக்கு மகாராணியார் செய்த உதவி
ஆனால், ராஜ குடும்பத்துக்குள் வருவதற்கு முன்பே கேட், மகாராணியாரின் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டார் என்ற ஆச்சரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Vanity Fair பத்திரிகையின், ராஜ குடும்பம் தொடர்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளரான Katie Nicholl இந்த அரிய தகவலை வெளியிட்டுள்ளார்.
மகாராணியார் தனது தனிப்பட்ட அலுவலகத்துக்குள் கேட்டை அனுமதித்தது மட்டுமில்லாமல், அவரது உதவியாளர்களும் கேட்டுக்கு குறிப்பிட்ட விடயங்களில் உதவ அனுமதித்துள்ளார் என்கிறார் Katie Nicholl.
Image: WireImage
ராஜ குடும்ப கடமைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்ட கேட்
ராஜ குடும்பத்துக்குள் திருமணமாகி வந்த எத்தனை பெண்களுக்கு இந்த பாக்கியம் கிடைத்திருக்குமோ தெரியாது, ஏன் இளவரசர் சார்லசின் மனைவி டயானாவுக்குக்கூட அப்படி ஒரு உதவி கிடைத்ததா தெரியாது.
ஆனால், தன் பேரன் வில்லியமுடைய மனைவி ராஜ குடும்பத்துக்குள் வரும்போது, ராஜ குடும்ப கடமைகளை எப்படி மேற்கொள்ளவேண்டும், ஒரு ராஜ குடும்ப உறுப்பினராக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்து திருமணத்துக்கு முன்பே கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளித்திருக்கிறார் மகாராணியார். எப்படி இருந்தாலும், வருங்கால மன்னரின் மனைவி அல்லவா கேட்!
இளவரசி கேட்டும், மகாராணியார் தனக்குக் கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். அதனால்தான் இளவசரர் வில்லியமுக்கும் கேட்டுக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், குடும்ப வாழ்விலும் சரி, ராஜ குடும்ப கடமைகளைச் செய்வதிலும் சரி, தங்கள் கடமைகளை செவ்வனே செய்து மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்கள் வில்லியம் கேட் தம்பதியர்.
Image: WireImage