கையில் காயத்துடன் சிறைக்குச் சென்ற பிரித்தானிய இளவரசி கேட்: விவரம் செய்திக்குள்
பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியாகிய இளவரசி கேட், இங்கிலாந்திலுள்ள சிறை ஒன்றிற்கு சென்றதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
குறும்பு முகம் காட்டிய இளவரசி
இங்கிலாந்திலுள்ள HMP High Down என்னும் சிறைக்குச் சென்ற இளவரசி கேட்டை, முறைப்படி அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட, அவர் பயந்தது போல குறும்பு முகம் காட்டியபடி அமர்ந்திருப்பதைக் காட்டும் புகைப்படங்களையும் காணமுடிகிறது.
Credit: AP
போதைக்கு அடிமைப்படுதல் குறித்த விழிப்புணர்வு வாரத்தையொட்டியே அந்த சிறைக்குச் சென்றிருந்தார் கேட். அது தொடர்பான தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவு தெரிவிக்கும் கேட், சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் அந்த தொண்டு நிறுவனம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்வதற்காக அந்த சிறைக்குச் சென்றிருந்தார்.
கையில் என்ன காயம்?
இளவரசி கேட்டின் விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் விரல்களில் பிளாஸ்டர் ஒட்டியிருந்ததை புகைப்படங்களில் காண முடிகிறது.
Credit: Splash
காலையில் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் முன் ட்ராம்போலின் என்னும் விளையாட்டு உபகரணத்தின் மீது குதித்து விளையாடுவார்களாம். உடற்பயிற்சிக்காக தானும் அவர்களுடன் குதிப்பதுண்டு என்று கூறிய கேட், அவ்வாறு குதிக்கும்போது தன் விரல்களில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
Credit: EPA
கேட் கைகளில் காயம் ஏற்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னும் பல முறை அவர் இதேபோல கைகளில் பிளாஸ்டருடன் காணப்பட்டதுண்டு. அவர் கைகளில் பிளாஸ்டருடன் காணப்பட்ட காட்சிகளை மையமாக வைத்தே பிரித்தானிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டதும் உண்டு!
Credit: AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |