புற்றுநோய்க்கு பிறகு நினைவு தின நிகழ்வில் இளவரசி கேட்! மன்னருக்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் சனிக்கிழமை நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பொதுவெளியில் இளவரசி கேட்
வேல்ஸ் இளவரசி கேட், ராயல் பிரிட்டிஷ் லெஜியனின் நினைவு விழாவில்(Royal British Legion's Festival of Remembrance) மூத்த ராயல் உறுப்பினர்களுடன் பங்கேற்று பொது வாழ்க்கைக்கான தன்னுடைய முக்கியமான மீள்குறிப்பை வெளிப்படுத்தினார்.
கணவர் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியமுடன் உரையாடிக் கொண்டிருந்த கேட், இருவரும் போப்பி(poppies) மலர்களுடன் அலங்கரிக்கப்பட்ட ஆடையுடன், ராயல் ஆல்பர்ட் ஹாலில் (Royal Albert Hall) தங்களது இருப்பை வெளிப்படுத்தினர்.
மேலும் இளவரசி கேட் ஞாயிற்றுக்கிழமை Cenotaph நடைபெறும் நினைவு தின சேவையிலும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேல்ஸ் இளவரசி கேட்டின் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு பிறகு, அவரின் இந்த தோன்றுதல் பொதுப் பணிகளுக்கு கேட்டின் மெதுவான திரும்புதலில் முக்கிய செயலாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக கணவர் இளவரசர் வில்லியமுடன் சவுத் போர்ட்டில் நடைபெற்ற அரச முறை பயணத்தில் கேட் கலந்து கொண்டார்.
மன்னருக்கு உற்சாக வரவேற்பு
இந்த நிகழ்ச்சியில் மன்னர் 3ம் சார்லஸும், இளவரசி அனியும்(Anne) கலந்து கொண்டனர்.
மன்னர் சார்லஸ் லண்டன் அரங்கிற்குள் நுழையும்போது, கூட்டத்தினர் எழுந்து நின்று கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
This evening The King, The Prince and Princess of Wales, and other members of the Royal Family, attended the Festival of Remembrance at the @RoyalAlbertHall. Organised by @PoppyLegion, the Festival is an annual commemorative concert which honours all those who have lost their… pic.twitter.com/7kobYtnKNc
— The Royal Family (@RoyalFamily) November 9, 2024
ராணி கமீலா, மார்பு தொற்று காரணமாக இந்த வார இறுதியில் நடைபெறும் இந்த நினைவு நிகழ்ச்சிகளை தவறவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |