திருமண மோதிரம் இல்லை... கேட் மிடில்டனின் புகைப்படம் போலி: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அன்னையர் தினத்தில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் வெளியிட்ட குடும்ப புகைப்படம் போலி என்றும், அதை ஊடகங்களில் பகிர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனித்தனியாக எச்சரிக்கை அறிக்கை
உலக அளவில் முதன்மை நிறுவனங்களான Getty, AP, AFP ஆகிய மூன்று நிறுவனங்களும் தனித்தனியாக இந்த விவகாரம் குறித்து, எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், அந்த புகைப்படத்தை பகிர வேண்டாம் என்றும், அது உருவாக்கப்பட்ட போலியான புகைப்படம் என்றும் எச்சரித்துள்ளது.
மட்டுமின்றி, தங்கள் வசமிருக்கும் பிரதியையும் அழித்துவிட இருப்பதாக குறிப்பிட்டுள்ளன. வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் உண்மையான புகைப்படத்தில் அவரது மூன்று பிள்ளைகளின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது என்றே குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களும் உறுதி செய்துள்ளது.
கேட் மிடில்டன் வெளியிட்ட அந்த புகைப்படத்தை விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தினால், அது போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்றும் புரியவரும் என AP நிறுவனம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி தொடர்புடைய புகைப்பட்டத்தில், கேட் மிடில்டனின் விரலில் திருமண மோதிரம் இல்லை என்றும், புதிய விவாதம் ஒன்றும் எழுந்துள்ளது. அன்னையர் தினத்தை முன்னிட்டு, வழக்கமாக கேட் மிடில்டன் தங்களது குடும்ப புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.
புகைப்படம் போலி
ஆனால் இந்தமுறை இளவரசர் வில்லியம் தவிர்த்து, மூன்று பிள்ளைகளுடனான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த புகைப்படத்தை இளவரசர் வில்லியமே பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், குட்டி இளவரசி Charlotte-வின் ஒருபக்க தோள் மற்றும் கை தொடர்பிலும் சந்தேகம் எழுப்பப்பட்டது. குட்டி இளவரசர் லூயிஸின் விரல்கள் மாயமானது எப்படி என்றும் சமூக ஊடகத்தில் விவாதமானது.
தற்போது மூன்று முதன்மையான நிறுவனங்கள் அந்த புகைப்படம் போலி என்பதை விரிவான ஆய்வுக்கு பின்னர் உறுதி செய்துள்ளதுடன், எச்சரிக்கை அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |