தலை வெட்டப்பட்ட நிலையில் பலர்: சிறைக்குள் நடந்த பகீர் சம்பவம்
ஈக்வடார் சிறையில் இருவேறு குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையால் 24 பேர் கொல்லப்பட்டதுடன் 48 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதில் 8 பேர்கள் தலை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சண்டையில் ஈடுபட்ட இரு குழுக்களும் மெக்சிகன் போதை மருந்து கார்டல்களுடன் தொடர்பு உள்ளவர்கள் என்றே கூறப்படுகிறது. சர்வதேச போதை மருந்து கும்பல்களுக்கு இடையேயான மோதல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு, ட்ரோன் மூலம் சிறைச்சாலை தாக்கப்பட்டதாக சிறை அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது.
மேலும், பிற்பகல் வரை சிறையின் பெவிலியன் ஒன்றின் கட்டுப்பாட்டிற்காக இந்த கும்பல்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தேசிய காவல்துறை மற்றும் ஈக்வடார் ஆயுதப் படைகளால் பல மணிநேர கடுமையான சண்டைக்குப் பிறகு சிறைச்சாலை குறித்த கும்பல்களிடம் இருந்து மீட்கப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மொத்தம் 24 பேர்கள் கொல்லப்பட்டதுடன், இதில் 8 பேர்களின் தலை துண்டிக்கப்பட்டதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
2018ல் மூன்று சிறைகளில் ஒரே நேரம் நடந்த குழு சண்டையில் மொத்தம் 79 பேர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.