சிறைக்குள் போதைப்பொருளை ஜூஸ் பெட்டியில் கடத்திய பெண் அதிகாரி: விதிக்கப்பட்ட தண்டனை என்ன?
அதிக அளவிலான போதைப்பொருள்களை ஜூஸ் அட்டை பெட்டியில் மறைத்து சட்டவிரோதமாக சிறைச்சாலைக்குள் எடுத்துச் சென்ற முன்னாள் சிறை அதிகாரிக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள்
பிரித்தானியாவின் HMP Parc சிறையில் அதிக அளவில் போதைப்பொருள்களை ஜூஸ் அட்டை பெட்டியில் மறைத்து எடுத்துச் சென்ற முன்னாள் சிறை அதிகாரிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோடி பீர் (Jodie Beer) என்ற பெண் சிறை அதிகாரியாக சவுத் வேல்ஸ் சிறையில் பணியாற்றி வந்தபோது, 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தனது ஓய்வு நேரத்தில் கார் பார்க்கிங்கில் தனது வாகனத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது பொலிஸ் அதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதையடுத்து அவரது காரில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது, பிளாஸ்டிக் பொதி ஒன்றில் இருந்து அதிகப்படியான ஆரஞ்சு ஜூஸ் அட்டைப் பெட்டிகளை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் ஜோடி பீர் அதில், class A மற்றும் class C ரக போதை பொருட்கள், மொபைல் போன்கள், மற்றும் சிம் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கூடுதலாக Llanharry பகுதியை சேர்ந்த 30 வயதான ஜோடி பீர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் £4,000 பணம் கைப்பற்றப்பட்டது.
6 ஆண்டுகள் சிறை தண்டனை
இறுதியில் குற்றத்தை ஒப்புக் கொண்ட ஜோடி பீர், இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு £5,000 பவுண்ட்கள் பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
விசாரணையின் இறுதியில் ஜூன் 3ம் திகதி Cardiff Crown நீதிமன்றம் ஜோடி பீரை குற்றவாளியாக அறிவித்தது.
இந்த நிலையில் முன்னாள் சிறை அதிகாரியான ஜோடி பீருக்கு வெள்ளிக்கிழமை Merthyr Tydfil Crown நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |