யார் என்னைப் பற்றி என்ன பேசினாலும்... I Don't Care: பிருத்வி ஷா
என்னை ஏன் இந்திய அணியிலிருந்து நீக்கினார்கள் என தனக்கு காரணம் தெரியவில்லை என கூறியுள்ளார் இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா.
கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் முதலாக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தியவர் பிருத்வி ஷா. இதனையடுத்து, 18 வயதிலேயே சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமைப் பெற்றார்.
வருங்காலத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரரராக வருவார் என்று இவர் மீது ரசிகர்கள் மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்தது.
ஆனால், நிலைமை தலைகீழாக மாறியது. வெறும் 5 ஆண்டுகளில் 5 டெஸ்ட், 6 ஒருநாள், ஒரு டி20 போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளார்.
மனமுடைந்த பிரித்வி ஷா
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
நான் ஏன் இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்டேன் என்று எனக்கு தெரியவில்லை.
பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து அதிரடியாக விளையாடினேன். இதனால், எனக்கு டி20 அணியில் இடம் பெற்றேன்.
ஆனால், பிளேயிங் லெவனில் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.இது எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இருந்தாலும், அடுத்து முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அதிரடியாக நான் நீக்கப்பட்டேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
சண்டை போடவும் முடியாது. என்னை யார் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். என்னைப் பற்றி எனக்குதான் தெரியும். நான் என் உலகத்தில் தனியாக இருக்க விரும்புகிறேன். எனக்கு நண்பர்கள் கிடையாது. நான் யாரிடமும் பேசவும் முடியாது.
இதுதான் என் பிரச்சினை. என்னுடைய நிலைமையை கண்டு எனக்கு பயம் வருகிறது. எனக்கு இரண்டு நண்பர்கள்தான். அவர்களிடமும் நான் எதையும் பகிரமாட்டேன். தற்போது எனக்கு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு வந்துள்ளது. அதில் என் திறமையை நிரூபிப்பேன் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |