பார்ட்டி நடந்த வீட்டுக்குள் ஜன்னல் வழியாக பார்த்த நபர் கொடுத்த புகார்... திபுதிபுவென நுழைந்த பொலிசார் கண்ட காட்சி!
லண்டனில் வீடு ஒன்றில் பார்ட்டி நடப்பதாக புகார் வந்ததையடுத்து பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.
தடையை மீறி ஏராளமார் கூடி பார்ட்டி நடத்துவதை ஜன்னல் வழியாக பார்த்த பொலிசார் 10 பேர், அந்த வீட்டுக்குள் திபுதிபுவென நுழைந்துள்ளனர்.
அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை ஏமாற்றமடையச் செய்ததோடு விழுந்து விழுந்து சிரிக்கவும் வைத்துள்ளது.
நடந்தது என்னவென்றால், தனியார் ஜெட் நிறுவன அதிபரான Steve Varsano (64), தனது காதலி Lisa Tchenguiz (56)க்காக சர்ப்ரைஸ் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
அந்த பார்ட்டிக்காக 70 நண்பர்களை ஒன்லைனில் இணையுமாறு கேட்டுக்கொண்டுள்ள Steve, அவர்கள் 70 பேரின் கட் அவுட்களையும் செய்து வீட்டுக்குள் நிறுத்திவைத்திருக்கிறார்.
பிறகு, ஒன்லைனில் நண்பர்களை இணையச் செய்து பார்ட்டி தொடங்கியுள்ளது.
அப்போது அந்த வழியே வந்த சிலர், வெளிச்சத்தையும் ஆட்கள் இருப்பது போல் தெரிந்த தோற்றத்தையும், அலங்காரம் செய்யும் வாகனம் வந்ததையும் கண்டு, அந்த வீட்டுக்குள் ஏரளமானோர் கூடி பார்ட்டி நடத்துவதாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
உடனே பொலிஸ் வாகனங்களில் சைரன் ஒலிக்க பொலிசார் அந்த வீட்டுக்கு விரைந்துள்ளனர். வீட்டுக் கதவைத் தட்டிய பொலிசாரைக் கண்ட Steve திகைக்க, பொலிசார் வீட்டை சோதனையிடவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
தான் நடத்துவது ஒன்லைன் பார்ட்டிதான் என்று கூறியும் நம்பாமல், குற்றவாளி வீட்டுக்குள் நுழைந்ததுபோல சுமார் 10 பொலிசார் வீட்டுக்குள் திபுதிபுவென நுழைந்து அறைகளை சோதனையிட்டதாக தெரிவிக்கிறார் Steve.
கடைசியில் உண்மை புரிந்ததும், விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, விடைகொடுத்துவிட்டு சென்றனராம் பொலிசார்.



