நான் உலக அழகி பட்டம் வென்றபோது என் கணவருக்கு 7 வயதுதான் - மனம் திறந்து பேசிய பிரியங்கா சோப்ரா
நான் உலக அழகி பட்டம் வென்றபோது என் கணவருக்கு 7 வயதுதான் என்று ஒரு பேட்டியில் நடிகை பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை ப்ரியங்கா சோப்ரா
2000ம் ஆண்டு லண்டனில் உலக அழகிப் பட்டம் வென்று சாதனைப் படைத்தவர்தான் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான 'தமிழன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை பிரியங்கா சோப்ரா.
இதனையடுத்து, பாலிவுட் பக்கம் திரும்பி பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ப்ரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைந்த நிக் ஜோன்ஸ் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தனர்.
சமீபத்தில், ப்ரியங்கா சோப்ராவும், அவரது கணவர் நிக் ஜோனாஸ் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள மெட் காலா 2023 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இருவரும் கருப்பு நிற உடையில் அந்த நிகழ்ச்சியில் தோன்றினர். 7 ஆண்டுகளுக்கு முன் இதே நிகழ்ச்சியில் இருவரும் முதன் முதலாக சந்தித்துக் கொண்டதாக பல நினைவுகளை அங்கு பகிர்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா அணிந்து வந்த வைர நெக்லஸ் இணையதளங்களில் பேசும்பொருளாக மாறியது. சுமார் 204 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்கேரி வைர நெக்லஸை பிரியங்கா சோப்ரா அணிந்து வந்தது அனைவரது கவனத்தையும் பெற்றது.
மனம் திறந்து பேசிய பிரியங்கா சோப்ரா
இந்நிலையில், பிரியங்கா சோப்ரா ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
லண்டனில் கடந்த 2000ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் நான் உலக அழகி பட்டத்தை வென்றேன். அப்போது எனக்கு 17 வயது தான். ஆனா... என் கணவர் நிக் ஜோனாஸுக்கு அப்போ 7 வயது தான். நான் உலக அழகிப் பட்டத்தை வென்றதை டிவியில் நிக் ஜோனாஸும், அவரது தந்தையும் பார்த்துள்ளனர். இந்தத் தகவலை என் மாமியார்தான் என்னிடம் சொன்னார் என்று பேசினார்.