உலக அழகி, ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மிரள வைக்கும் சொத்து மதிப்பு
ஹாலிவுட்டின் பிரபலமான நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு குறித்து காண்போம்.
உலக அழகி பிரியங்கா
2000ஆம் ஆண்டில் உலக அழகிப்பட்டம் வென்றவர் இந்தியாவின் ஜார்கண்ட்டைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra).
அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், படிப்படியாக உயர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
2017ஆம் ஆண்டில் வெளியான "பே வாட்ச்" படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்த பிரியங்கா சோப்ரா, ஆங்கில படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து உலக அளவில் பிரபலமானார்.
இதற்கிடையில் 2018யில் தன்னை விட 11 வயது குறைந்த ஆங்கில பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா சோப்ரா.
பிரியங்கா நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், முதலீட்டாளர் என பன்முக வடிவில் தற்போது செழித்து வருகிறார்.
43வது வயதில் சொத்து மதிப்பு
இன்று 43வது வயதில் அடியெடுத்து வைக்கும் பிரியங்காவின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி (2025) என கணக்கிடப்படுகிறது.
உயர்மட்ட சம்பளத்தை பிரியங்கா பெறுகிறார். அதாவது ஒரு படத்திற்கு ரூ.30 முதல் ரூ.40 கோடியை அவர் பெறுவதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் இந்தியாவின் அதிக ஊதியம் பெறும் நடிகையாகவும் அவர் விளங்குகிறார். எஸ்.எஸ்.ராஜ்மௌலியின் படத்திற்காக பிரியங்காவிற்கு ரூ.30 சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.
முதலீட்டாளர்
இந்தியாவில் செயல்படத் தொடங்கிய டேட்டிங் செயலியான பம்பிள் மற்றும் தனது தயாரிப்பு நிறுவனமான பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் தயாரித்த தி ஒயிட் டைகர் ஆகியவற்றிலும் பிரியங்கா பங்குகளை வைத்திருக்கிறார்.
அவரது ரியல் எஸ்டேட் முதலீடுகளில், கணவர் நிக் ஜோனாஸுடன் அவர் பகிர்ந்துகொள்ளும் 20 மில்லியன் (ரூ.170 கோடி) லாஸ் ஏஞ்சல்ஸ் மாளிகை மற்றும் இந்தியாவில் உள்ள பிளாட்கள் ஆகியவை அடங்கும்.
இந்த வணிக ஒப்பந்தங்கள் மற்றும் ஆடம்பர விலை பிராண்ட் ஒப்புதல்கள், அவரது மதிப்பிடப்பட்ட ரூ.620 கோடி நிகர மதிப்பில் பெரும்பாலானவை ஆகும்.
பிரியங்கா மற்றும் நிக் ஜோனாஸின் மொத்த நிகர மதிப்பு ரூ.1250 கோடி ஆகும். இதில் நிக் ரூ.666 கோடி ஈட்டியிருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |