பவுல்கரி விளம்பரத்தில் பிரியங்கா சோப்ரா: அவர் அணிந்திருந்த ஆடை எவ்வளவு தெரியுமா?
பவுல்கரி விளம்பரத்தில் மணமகள் தோற்றத்தில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா ஜொலித்த தருணங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பவுல்கரி விளம்பரத்தில் பிரியங்கா சோப்ரா
ஆடம்பர நகைப் பிராண்டான பவுல்கரியின் (Bvlgari) உலகளாவிய பிராண்ட் தூதரான பிரியங்கா சோப்ரா ஜோனஸ் (Priyanka Chopra Jonas), சமீபத்தில் இந்தியாவில் ஒரு விளம்பரப் படப்பிடிப்பில் ஈடுபட்டார்.
இதில் அவர் அணிந்திருந்த அற்புதமான மணமகள் தோற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பவுல்கரியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலை 24 அன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், பிரியங்கா சோப்ரா பிரமிக்க வைக்கும் ஐவரி நிற கவுனில் (gawn) "குறைவாக அணிவது அழகை கூட்டும்" என்ற கருத்துடன் தோன்றி மிரள வைத்துள்ளார்.
நேர்த்தியான மணமகள் உடை
இந்த விளம்பரப் படப்பிடிப்புக்காக, பிரியங்கா கால்மேயர் (Kallmeyer) பிராண்டின் நேர்த்தியான ஐவரி சாஃப்ட் சாடின் கவுனை (ivory soft satin gown) உடுத்தியிருந்தார். இந்த நீண்ட கவுன், தோள்பட்டைகளில் மென்மையான மடிப்புகளுடன் கூடிய ஒரு கோவல் நெக்லைனை (cowl neckline) கொண்டிருந்தது.
கவுனின் பின்புறம் கவர்ச்சியான, ஆழமான டிராப் (drape) உள்ளது. இந்த கவுனின் வடிவமைப்பு, நேர்த்தியையும், உடலின் அசைவுகளையும் சமநிலைப்படுத்தி, அவரது உருவத்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது.
ஒரு வெள்ளை நிற திருமணத்திற்கு திட்டமிடும் எந்த மணப்பெண்ணுக்கும் இது ஒரு அருமையான தேர்வாக இருக்கும்.
ஆடையின் விலை
இந்த விளம்பரத்தில் பிரியங்கா அணிந்திருக்கும் கால்மேயர் தோமா டிராப்ட் கவுன் இன் சாஃப்ட் சாடின் (Kallmeyer Toma Draped Gown in Soft Satin), வடிவமைப்பாளரின் இணையதளத்தில் ₹1,09,800 க்கு கிடைக்கிறது.
பிரியங்கா தனது நேர்த்தியான கவுனுக்கு ஏற்றவாறு, பவுல்கரியின் (Bvlgari) கண்கவர் நகைகளை அணிந்திருந்தார். வண்ணமயமான ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட அற்புதமான நெக்லஸையும், அதனுடன் ஒரு மின்னும் வைர மோதிரத்தையும், ஸ்டேட்மென்ட் காதணிகளையும் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |