கைவிலங்கிட்டு அழைத்து வர வேண்டுமா? பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்: பிரியங்கா காந்தி ஆவேசம்
அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டது குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்ச்சை
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை விலங்கிட்டு திருப்பி அனுப்பியது சர்ச்சையாக வெடித்துள்ளது. நேற்று மதியம் பஞ்சாபின் அமிர்தசரஸில் ராணுவ விமானம் தரையிறங்கியது.
அதில் அரியானா, குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேரும், பஞ்சாபை சேர்ந்த 30 பேரும், மராட்டியம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா 3 பேர் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 104 பேர் இருந்துள்ளனர்.
தங்களது கைகளும், கால்களும் விமான பயணத்தின்போது கட்டப்பட்டிருந்ததாக நாடு திரும்பியவர்கள் தெரிவித்தனர். மேலும் தரையிறங்கிய பின்னரே விலங்குகள் அவிழ்க்கப்பட்டன என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
பிரியங்கா காந்தி கேள்வி
இதனை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக கண்டித்துள்ளார். அத்தத்துடன் அவர் பிரதமரை நோக்கி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் கூறுகையில், "மோடியும், ட்ரம்பும் மிக நல்ல நண்பர்கள் என நிறைய விடயங்கள் கூறப்பட்டன. பின்னர் ஏன் இப்படி நடக்க பிரதமர் மோடி விட வேண்டும்? நம்முடைய விமானத்தில் அவர்களை அழைத்து வர முடியாதா?
கை விலங்குகளை இட்டும், சங்கிலிகளால் கட்டியும் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டுமா? மக்களிடம் இந்த வழியிலா நடந்து கொள்வது? இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நிச்சயம் பதிலளிக்க வேண்டும்" என விளாசியுள்ளார்.
![Priyanka Gandhi Priyanka Gandhi](https://cdn.ibcstack.com/article/0a5c51a8-151a-4cc4-b590-948731948bf1/25-67a4a67f41ba9.webp)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |