மாலத்தீவு தேர்தலில் சீன ஆதரவு கட்சிக்கு அமோக வெற்றி! இந்தியாவுக்கு கூடுதல் நெருக்கடி தரும் நேரம்
மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் பிஎன்சி கட்சி 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மாலத்தீவின் ஒருசபையை கொண்ட சட்டமன்ற அமைப்பிற்கு மக்கள் 'மஜ்லிஸ்' (People's Majlis) என்று பெயராகும். இந்த மஜ்லிஸுக்கு மாலத்தீவின் அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சட்டங்களை இயற்றவும், திருத்தவும் அதிகாரம் உள்ளது.
Maldives Parliamentary Elections
மாலத்தீவின் 20 -வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. அதாவது, 93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
இதில் அதிபர் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) கட்சி 86 இடங்களில் 66 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இது நாடாளுமன்றத்தில் 3 -ல் 2 பங்காகும்.
முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறவில்லை. ஆனால், இந்த முறை பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதால் முகமது முய்சு அரசுக்கு கூடுதல் பலமாக உள்ளது.
அதாவது, முன்பு முகமது முய்சுவின் பிஎன்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்கள் மட்டுமே இருந்ததால் நாடாளுமன்றத்தில் எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர முடியவில்லை.
எதிர்க்கட்சிகளின் தலையீட்டால் அது முடக்கப்பட்டது. தற்போது, அவர் நினைத்த சட்டங்களை நிறைவேற்றி கொள்ளலாம்.
சீனாவுக்கு ஆதரவான முகமது முய்சு
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் கொண்டவர் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு. இந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு சீன ஆதரவு செயல்பாட்டை அதிகமாக முன்னெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, மாலத்தீவில் இருந்து இந்தியப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று முகமது முய்சு தெரிவித்திருந்தார். ஆனால், இதனை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவில்லை.
இந்திய ராணுவம் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரமும் செய்தார்.
இதையடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிறகும் கூட இந்தியாவை விமர்சித்த முகமது முய்சு, நெருங்கிய நண்பராக இந்தியா இருக்கும் என்றும் கூறி நிலைப்பாட்டை மாற்றினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |