லண்டனில் ஈரானிய தலைவரின் நினைவேந்தலில் மோதிக்கொண்ட குழுக்கள்..அதிகரித்த பதற்றம்
பிரித்தானியாவின் லண்டன் நகரில், ஈரானிய தலைவர் அலி காமெனியின் நினைவேந்தலின்போது எதிரெதிர் குழுக்கள் மோதிக் கொண்டதால் பதற்றம் அதிகரித்தது.
லண்டனில் நினைவேந்தல்
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார்.

அவரது நினைவேந்தல் பிரித்தானியாவின் லண்டனில் உள்ள இஸ்லாமிய மையத்தில் சனிக்கிழமை நடந்தது.
மையத்திற்கு வெளியே, ஆர்ப்பாட்டக்காரர்கள் காமெனியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, ஈரானியக் கொடியை அசைத்தனர்.
அப்போது சாலையின் மறுபுறத்தில் இருந்து, ஒரு பெரிய எதிர்-ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு அவர்களை நோக்கி கோஷமிட்டது.
பதற்றம்
அவர்கள் டொனால்ட் ட்ரம்ப், நெதன்யாகு ஆகியோரது படங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியதுடன், 'நாங்கள் உங்களை நம்புகிறோம்' என்ற வாசகத்தையும் கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் அலி காமெனியின் ஆதரவு குழுவுடன் எதிர் தரப்பு குழுவினர் மோதிக்கொண்டதால் பதற்றம் அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து கலவரங்களை அமைதிப்படுத்தவும், இடையூறு செய்த போராட்டக்காரர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் பெருநகர காவல்துறை மற்றும் லண்டன் நகர காவல்துறையினர் செயல்பட்டனர்.
எனினும் சுமார் 25 பேரை கைது செய்ததாக பெருநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக பாலஸ்தீன நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாக 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |