இலங்கை- அவுஸ்திரேலியா மோதும் சிட்னி மைதானத்திற்கு முன்பாக விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் போராட்டம்
அவுஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நடக்கும் சிட்னி மைதானத்திற்கு முன்பாக விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று பிப்ரவரி 11ம் திகதி சிட்னி மைதானத்தில் நடக்கவிருக்கிறது.
இந்நிலையில், சிட்னி மைதானத்திற்கு முன்பாக விடுதலை புலிகளுக்கு ஆதரவாக சிலர் ‘தமிழ் இனப்படுகொலையை இலங்கை கிரிக்கெட் மறைக்க அனுமதிக்காதீர்கள்’ என்று அச்சடிக்கப்பட்ட சிவப்பு நிற மேலாடை அணிந்த படி பதாகைகள், கொடிகள் ஏந்திய படி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமிழர்களுக்கு நிரந்திர தீர்வு வேண்டும். தமிழ் அகதிகளை அவுஸ்திரேலிய திருப்பி அனுப்பக்கூடாது.
ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் தமிழர்களை பாதுகாக்க வேண்டும். தமிழ் இனப்படுகொலை குற்றமாகும், எங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற கோரிக்கைகள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்திய படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.