இனப்படுகொலைக்கு முடிவு... பெர்லின் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கானோர்
பெர்லினின் அடையாளச் சின்னமான பிராண்டன்பர்க் வாயிலுக்கு முன்னால் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், காஸாவில் இனப்படுகொலைக்கு முடிவு கட்ட கோரிக்கை வைத்தனர்.
பாலஸ்தீன ஆதரவு
அத்துடன் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதையும் நிறுத்த வேண்டும் என கோரியுள்ளனர். முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து ஜேர்மன் தலைநகரின் மையத்தில் நடைபெற்ற பேரணியில் சுமார் 12,000 பேர் கலந்து கொண்டனர்.
குறித்த பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்த தீவிர இடதுசாரிகள் கட்சியான BSW, அந்த ஆர்ப்பாட்டத்தில் 20,000 பேர்கள் கலந்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளது. மட்டுமின்றி, சமீபத்திய மாதங்களில் ஜேர்மனியில் நடந்த மிகப்பெரிய பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் ஒன்று எனவும் அடையாளப்படுத்தியுள்ளது.
20 வயதான மாணவி ஒருவர் தெரிவிக்கையில் இஸ்ரேலுக்கான மொத்த ஆயுத ஏற்றுமதியையும் ஜேர்மனி நிறுத்த வேண்டும் என்றார். ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட ஆயுதங்களின் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக சேன்ஸலர் மெர்ஸ் அறிவித்திருந்தார்.
ஏற்றுமதி செய்யாது
மேலும், காஸாவில் பயன்படுத்தக் கூடிய ஆயுதங்களை ஜேர்மனி ஏற்றுமதி செய்யாது என்றே அவர் தெரிவித்திருந்தார். இன்னொரு இளைஞர் தெரிவிக்கையில், காஸாவில் தற்போதை நிலைமை அதிர்ச்சியை அளிப்பதாகவும்,
அப்பாவி சிறார்கள் கொல்லப்படுவதும், பட்டினியால் அவதிப்படும் ஏற்றுக்கொள்ள் முடியாதவை என்றார். உக்ரைனிலும், மத்திய கிழக்கிலும் அமைதிப்பேச்சு வார்த்தைக்கு ஜேர்மனி முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |