உக்ரைன் போர்க்குற்ற விசாரணையில் சிக்கிய புடின் ஆதரவு பிரித்தானியர்
முன்னாள் அரசு ஊழியரான பிரித்தானியர் ஒருவர் முதல் முறையாக உக்ரைன் மோதலில் போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்ளவிருக்கிறார்.
லண்டன் பொலிஸ்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆதரவாளரான 46 வயது கிரஹாம் பிலிப்ஸ் என்பவரே லண்டன் பொலிசாரின் போர்க்குற்ற விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

அதில், ரஷ்யாவிடம் போர்க் கைதியாக சிக்கிய 31 வயது பிரித்தானியர் ஐடன் அஸ்லின் என்பவரை மோசமாக நடத்தியதும், கொல்லப்பட்ட உக்ரைன் வீரரின் உடல் பாகங்களை பன்றிகளுக்கு உணவாக்கியதை இவர் காணொளியாகப் பதிவு செய்த விவகாரம் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய காணொளியை பிலிப்ஸ் கடந்த 2022 ஆகஸ்டு மாதம் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த நிலையில், தற்போது 2022ல் நடந்த சம்பவம் தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளதாக லண்டன் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஜெனீவா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தின் பல்வேறு மீறல்கள் தொடர்பில் இந்த விசாரணை கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. ஜெனீவா ஒப்பந்தத்தின் பிரிவு 34ல்,

முதல் பிரித்தானியப் பிரஜை
போரில் கொல்லப்படும் அல்லது போர்க்கைதி ஒருவரின் சடலத்தை துஸ்பிரயோகம் செய்வது குற்றம் என்பதுடன், உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றே எச்சரிக்கப்படுகிறது.
இதனிடையே, பிரித்தானிய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டு, தற்போது ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட மரியுபோலில் வசிக்கும் பிலிப்ஸ், 2022 காணொளி சம்பவத்தை துணிந்து ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்துடன், அந்த உக்ரேனிய வீரர்கள் டான்பாஸின் பொதுமக்களைக் கொல்லவே டான்பாஸுக்கு வந்தனர். டான்பாஸ் மக்கள் ரஷ்யாவுடன் இணைந்திருக்கவே விரும்பினர், உக்ரேனிய நாஜி ஆட்சியின் ஒரு பகுதியாக அல்லை.
அதானாலையே, அந்த வீரர்கள் பன்றிகளுக்கு உணவானார்கள் என கோபத்துடன் பதிலளித்துள்ளார். விசாரணையின் முடிவில் பிலிப்ஸ் மீது வழக்கு பதியப்படும் என்றால், பிப்ரவரி 2022 ல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் முதல் பிரித்தானியப் பிரஜை இவர் என்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |