மூட்டு வலி பிரச்சினையா? இதை சரி செய்ய வேண்டுமா? இந்த பயிற்சிகளை தினமும் செய்தாலே போதும்!
இன்று பலரும் மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் உண்டு. அதில் பெரியோர்கள் தான் இப்பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.
மூட்டுவலி பிரச்சினையை சரிசெய்ய யோகா பயிற்சி நமக்கு உதவி செய்கிறது.
மூட்டு வலியை சரிசெய்ய எந்த மாதிரியான யோகா பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
பயிற்சி 1
முதலில் யோக மேட் அல்லது நீங்கள் படுக்கையில் கூட அமர்ந்து இந்த பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம். உங்கள் கால்கள் இரண்டையும் நீட்டி கைகளை உங்கள் முதுகுக்குப் பின்னால் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம் அல்லது சப்போர்ட்டுக்கு சுவர்களையும் பயன்படுத்தலாம்.
முதல் பயிற்சி என்னவென்றால், உங்கள் வலது காலின் மூட்டுக்கு அடியில் உங்கள் கைகள் இரண்டையும் இணைத்து கால்களை நெஞ்சுவரை மடக்கி மெதுவாக நீட்டவும்.
இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது மூச்சை உள்ளே இழுத்து பின்னர் மெதுவாக வெளியே விட வேண்டும். இதேபோல் இடது காலில் மூட்டுக்கு அடியில் கைகளை இணைத்து, நெஞ்சுக்கு நேராக கால்களை மடக்கி மெதுவாக கால்களை நீட்டவும். இப்போது மூச்சை உள்ளே இழுத்து பின்னர் மெதுவாக வெளியே விட வேண்டும்.
இதே மாதிரி பத்து முறை செய்ய வேண்டும். யாருக்கெல்லாம் மூட்டு வலி இருக்கிறதோ அவர்கள் தினமும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். ஒரு முறை இந்த பயிற்சியை மேற்கொண்ட உடன் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் அடுத்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.
பயிற்சி 2
உங்களது வலது மூட்டுக்கு இடையில் ஒரு கை மற்றொரு கையின் கை முட்டியை பிடிக்குமாறு நன்கு இறுக்கமாக பிடித்துக் கொள்ள வேண்டும். உங்களது வலது கால் மடக்கிய நிலையில் நெஞ்சுடன் ஒட்டி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்கள் காலை சற்று உயரமாக தூக்கி, உங்களது காலை சுழற்ற வேண்டும். இதுவே மூட்டுகளை சுழற்றும் பயிற்சியாகும்.
இதே மாதிரி பத்து முறை வலது புறமும், பின்னர் இடது புறமும் செய்யலாம் . ஆரம்பத்தில் நீங்கள் கால்களை சுழற்றும் போது சிறிய வட்டமாக சுழற்ற தொடங்கி பின்னர் நாளடைவில் உங்களது கால்கள் நெகிழ்வு தன்மை பெற்று பெரிய வட்டமாக சுற்றலாம்.
இந்த பயிற்சியை நேர் புறம் 10 முறையும், எதிர்ப்புறம் 10 முறையும் செய்யலாம். கடிகார சுழற்சி முறையில் மேற்கொள்ள வேண்டும். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.
பயிற்சி
3 கீழே அமர்ந்து கால்கள் இரண்டையும் நேராக நீட்டிக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களது முட்டியை இறுக்கி பின்னர் மெதுவாக இறுக்கத்தை தளர்த்த வேண்டும். இதுபோல் இருபதிலிருந்து முப்பது முறை வரை செய்யலாம்.
இந்த பயிற்சி செய்யும் போது உங்களுக்கு தசை இயக்கம் கிடைக்கிறது.
ஒவ்வொரு முறை பயிற்சி செய்த பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளும்போது நமது ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.