Gpay மூலம் தனிநபர் கடன் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க
UPI செயலிகளை பயன்படுத்துபவர்கள் Gpay மூலம் தனிநபர் கடன் வாங்குவதற்கு இந்த விடயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
Google Pay செயலி
Phonepe, Paytm ஆகிய UPI செயலிகளை விட Gpay (Google Pay) செயலியைதான் தற்போது மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இதில் செயலில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. அதிக மக்கள் பயன்படுத்தி வரும் இந்த செயலியில் கடன் (Loan) வசதியும் உள்ளது. அவசரகால தேவைகளுக்கு எளிதில் கடன் பெற இந்த செயலி பேருதவி செய்கிறது.
Gpay தகுதியுள்ள பயனர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.10,00,000 வரை கடன் வழங்குகிறது.
அதுவும் அவசர காலங்களில் பயனர்களுக்கு காகித வேலைகள் இல்லாமல் அல்லது வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், நிதியை விரைவாக அணுக உதவுகிறது.
பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் Gpay இணைந்து இந்த சேவைகளை நேரடியாக வழங்குகிறது.
வட்டி விகிதங்கள்
இந்த கடன்களுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 11.25 சதவீதத்தில் இருந்து தொடங்குகின்றன.
ஆனால், இறுதி விகிதம் உங்கள் கிரெடிட் ஸ்கோர், வருமானம் மற்றும் கடன் தொகையைப் பொறுத்து மாறுபடலாம்.
அதுவும் கடன் வாங்குபவர்கள், கடன் தொகைகள் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலங்களை தெரிவு செய்யலாம்.
அதாவது 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்தை பயனர்களே தெரிவு செய்துகொள்ள Gpay அனுமதிக்கிறது.
இதன் EMI மாதத்திற்கு ரூ.2000 முதல் (கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் காலத்தைப் பொறுத்து) தொடங்கும் வகையில் உள்ளது.
அத்துடன் கடனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அடிக்கோடிட்டு காட்டுவதால், கடன் பெறும் பயனர் நன்கு அறிந்திருப்பதை Gpay உறுதி செய்கிறது.
இந்த கடனை பெறுவதற்கு Gpay சில விதிகளை வைத்துள்ளது. அதாவது, கடன் பெறும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயதுடையவர்களாகவும், வேலைவாய்ப்பு அல்லது வணிகம் மூலம் வழக்கமான வருமான ஆதாரத்தைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும், அந்த விண்ணப்பதாரர்கள் Gpay செயலியுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கைக் கொண்டிருக்க வேண்டும்.
வழிமுறைகள்
- முதலில் Gpay செயலியைத் திறக்கவும். அடுத்து Manage Your Money என்பதைத் தெரிவு செய்யவும்.
- அதன் பின்னர் சிறிது Scroll செய்து Personal Loan எனும் விருப்பத்தைத் தெரிவு செய்யவும்.
- அடுத்து விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, வருமானம் போன்ற முக்கிய விவரங்களை நிரப்ப வேண்டும்.
- பின்னர் KYC ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் மற்றும் ஒப்பந்தத்தில் டிஜிட்டல் முறையில் கையொப்பமிட வேண்டும்.
- அடுத்து ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கடன்தொகை நேரடியாக பயனரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |