சுவிட்சர்லாந்துக்கான அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் துவக்கம்
Process underway to find new Swiss President: சுவிட்சர்லாந்துக்கான அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
சுவிட்சர்லாந்தின் தற்போதைய ஜனாதிபதியான கய் பார்மலின், தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், சுவிட்சர்லாந்துக்கான அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
சுவிஸ் ஜனாதிபதி ராஜினாமா
சுவிட்சர்லாந்தின் தற்போதைய ஜனாதிபதியான கய் பார்மலின், தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பார்மலின், உடல் நல பாதிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என நீண்ட நாட்களாகவே வதந்திகள் பரவி வந்தன.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பேசிய பார்மலின், தான் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன், அதற்குக் காரணம் தன் உடல் நலம் அல்ல என்றும், இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிப்பதற்காகவே தான் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி யார்?
சுவிட்சர்லாந்தின் தற்போதைய ஜனாதிபதியான கய் பார்மலினின் பதவிக்காலம் இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.
ஆகவே, சுவிட்சர்லாந்துக்கான அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், பெண்ணொருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அடுத்த ஜனாதிபதி பதவிக்கு, ஜெனீவாவைச் சேர்ந்த Céline Amaudruz, St Gallen செனேட்டரான Esther Friedli, சூரிக் சுகாதாரத்துறை அமைச்சரான Natalie Rickli மற்றும் Romand நாடாளுமன்ற உறுப்பினர்களான Yvan Pahud மற்றும் Nicolas Kolly ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.