மீண்டும் புதிய புயல்? டிசம்பரில் காத்திருக்கும் பேராபத்து - பேராசிரியர் ராமச்சந்திரன்
டிசம்பரில் புதிய புயல்கள் உருவாகுமா என்பது குறித்து பேராசிரியர் ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
திட்வா புயல்
வங்க கடலில் உருவான திட்வா புயல் இலங்கையில் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 390 பேர் உயிரிழந்துள்ளனர், 352 பேர் காணாமல் போயுள்ளனர்.

அதே போல், தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகள் அருகே வரும் புயலால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
ஆனால் புயலின் வேகம் குறைந்து புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததால் தமிழ்நாட்டில் பெரிய அளவிலான மழை இல்லை.
இந்நிலையில், திட்வா புயலை சரியாக கணிக்க முடியாதது ஏன்? வங்கக்கடலில் உருவாகும் புயல்கள் வானிலை கணிப்புகள் தவறாக மாறுவது ஏன்? டிசம்பரில் புயல் வருமா என்பது குறித்து பேராசிரியர் ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |