விமானம் கீழே விழுந்தாலும் உயிர் பிழைக்கலாம் - பொறியாளர்களின் புதிய திட்டம்
விமானம் கீழே விழுந்தாலும் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் புதிய திட்டம் ஒன்றை பொறியாளர்கள் முன்மொழிந்துள்ளனர்.
விமான விபத்து
சமீபகாலமாக விமான விபத்துகள் மற்றும் விமான அவசர தரையிறக்கம் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், மக்களிடையே விமான பயணம் குறித்த அச்சம் எழுந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்தை சந்தித்ததில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், விமானம் கீழே விழுந்தால் உயிரிழப்பை தடுக்கும் நோக்கில், புதிய திட்டம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
project rebirth
பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தின் (BITS) துபாய் வளாகத்தை சேர்ந்த பொறியாளர்களான எஷெல் வாசிம் மற்றும் தர்சன் ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும் இந்த இந்த திட்டத்தை வடிவமைத்து இதற்கு, project rebirth என பெயரிட்டுள்ளனர்.
இந்த திட்டப்படி, விமானம் பறக்கும் உயரம், வேகம், இயந்திர நிலை, தீ, திசை மற்றும் பைலட் பதில் ஆகியவற்றை AI சென்சார்கள் கண்காணிக்கும்.
விமானத்தில் செயலிழப்பு ஏற்பட்டால், விமானத்தின் வெளிப்புறம் உள்ள ஸ்மார்ட் ஏர் பேக்குகள் 2 வினாடிகளில் விரிவடைந்து, விமானம் கீழே இறங்கும் வேகத்தை குறைக்கிறது.
விமானம் தரையிறங்கும் வேகம் குறைக்கப்படுவதால், விமான அதி வேகத்தில் தரையில் மோதாமல், மென்மையாக தரையிறங்கி, உயிரிழப்புகள் தடுக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும், இதனை தற்போது பயன்பாட்டில் உள்ள விமானங்களிலும், புதிய விமானங்களிலும் நிறுவ முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தை, அவர்கள் ஜேம்ஸ் டைசன் விருதுக்கு அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். இன்னும் 5 வருடங்களில், இந்த திட்டத்தை சோதனை செய்து, அங்கீகாரம் பெற்று, விமானங்களில் பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் பயன்பாட்டிற்கு சாத்தியமானால், இதன் மூலம் விமான விப்புத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |