900 நாட்டுக்கோழிகளை வாங்கி சாப்பிட்டு.., விவசாயிக்கு லோன் கொடுப்பதாக ஏமாற்றிய மேனேஜர்
நாட்டுக்கோழிகள் கொடுத்தால் லோன் தருகிறோம் என்று விவசாயியை பேங்க் மேனேஜர் ஏமாற்றியுள்ளார்.
ஏமாற்றிய மேனேஜர்
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள மஸ்தூரி நகரில்,விவசாயியான ரூப்சந்த் மன்ஹர் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
இவர் தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக கடன் கோரி வங்கியை அணுகியுள்ளார். அவருக்கு ரூ.12 லட்சம் கடன் தருவதாக வங்கி மேலாளர் உறுதியளித்துள்ளார்.
அதற்காக முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார். பின்னர், தனது கோழிகளை விற்று இரண்டு மாதங்களில் 10% கமிஷன் முழுவதையும் மேனேஜருக்கு கொடுத்துள்ளார்.
இருந்தாலும் மேனேஜருக்கு நாட்டுக்கோழி மீதுள்ள விருப்பத்தால், வாரம்தோறும் சனிக்கிழமை தனது வீட்டிற்கு நாட்டுக்கோழி கொண்டுவருமாறு மன்ஹரிடம் கூறியுள்ளார்.
இதனால், மன்ஹரும் கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதுவரை மொத்தம் ரூ.39,000 மதிப்புள்ள 900 கோழிகளை மேனேஜருக்கு கொடுத்துள்ளார்.
ஆனால், வங்கி மேலாளர் கடன் அனுமதியை வழங்காமல் காலம் தாழ்த்துவதை அறிந்த விவசாயி தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்துள்ளார்.
இதையடுத்து, நடந்த சம்பவத்தின் விவரங்களையும், சப்ளை செய்த கோழிகளுக்கான பில்களையும் பொலிஸிடம் சமர்ப்பித்து புகார் அளித்துள்ளார்.
மேலும், தனக்கு நீதி கிடைக்காவிட்டால் வங்கியின் முன் தீக்குளிக்கப் போவதாகக் கூறியுள்ளார். தற்போது, வங்கி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |