விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரன் தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கல்
நேற்று பங்குனி உத்திரம் என்பதால் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் வேட்புமனு தாக்கலின் போது சொத்து மதிப்பையும் தாக்கல் செய்ய வேண்டும்.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூரும், பாஜக சார்பில் ராதிகாவும் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரனும் போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வேட்புமனு தாக்கலின் போது சொத்து மதிப்பையும் குறிப்பிட்டிருந்தார்.
சொத்து மதிப்பு
விஜய பிரபாகரன் தனது வேட்புமனு தாக்கலில் தனக்கு ரூ.17 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதாவது, ரூ 11.38 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும் 6.57 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல பிரேமலதாவுக்கு ரூ 6.49 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும் ரூ.48 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
கடந்த 2016 -ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விஜயாகாந்தின் சொத்து மதிப்பு ரூ.19.37 கோடி எனவும், பிரேமலதாவின் சொத்து மதிப்பு ரூ.17 கோடி எனவும் வேட்புமனுவில் தாக்கல் செய்திருந்தார்.
அதேபோல 2016 -ம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயாகாந்த் போட்டியிட்ட போது ரூ.20 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |