'கறுப்பினத்தவரை சுட்டுக் கொன்ற பொலிஸ் மீது வழக்கு தொடரமுடியாது' அதிகாரிகளின் முடிவால் கொந்தளிக்கும் குடும்பத்தினர்
போதுமான ஆதாரங்கள் இல்லை என கறுப்பினத்தவரை சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி மீது வழக்கு தொடரமுடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2020 மார்ச்சில் 47 வயதான நிராயுதபாணியான கறுப்பின மனிதரான Donnie Sanders-ஐ சுட்டுக் கொன்ற Kansas நகர காவல்துறை அதிகாரி மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய மாட்டோம் என்று மிசோரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Donnie Sanders (47) 2020 மார்ச் 12-ஆம் திகதி அன்று ஒரு சந்துக்குள் பொலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பெயர் வெளியிடப்படாத அந்த அதிகாரி, புலனாய்வாளர்களிடம், சாண்டர்ஸ் தன்னிடம் துப்பாக்கியைக் காட்டுவதாக நினைத்ததாகக் கூறினார்.
ஆனால், Sanders தனது சட்டைப் பையில் ஒரு செல்போன் வைத்திருந்தார், ஆயுதம் ஏந்தவில்லை என்று விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், Jackson County வழக்கறிஞர் Jean Peters Baker, Sanders-ன் கையில் ஒரு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு தன்னை நோக்கி நகர்ந்ததாக நினைத்து தற்காப்புக்காக சுட்டதாக பொலிஸ் அதிகாரியின் நம்பிக்கையை சாட்சியாக ஏற்பதாக கூறினார்.
மேலும், வெளியில் உள்ள மாவட்ட வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்தும், துப்பாக்கிச்சூடு நடந்த இரவில் இருந்து ஆடியோவை மேம்படுத்த முயற்சித்ததும், மேலும் சாட்சிகளுக்காக சம்பவம் நடந்த இடத்தை மீண்டும் மீண்டும் ஆய்வு செயதும் தனது அலுவலகம் இந்த முடிவை எடுத்ததாக Baker கூறினார்.
இந்நிலையில், தங்கள் குடும்பத்துக்கும் இனத்துக்கும் நீதி கிடைக்கவேண்டும் என Sanders-ன் குடும்பத்தினர் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.