ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் ஆர்ப்பாட்டம்
ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்திலுள்ள ஈரானிய தூதரகம் முன் கூடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
சனிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தின் Bern நகரில் அமைந்துள்ள ஈரானிய தூதரகம் முன் சுமார் 200 பேர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
முறைப்படி அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டாலும், அங்கு பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள், சுவிட்சர்லாந்தோ அமைதியாக இருக்கிறது என்று கூறும் பதாகைகளுடன் மக்கள் அங்கு கூடியிருந்தார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் கொடுத்த அதே நேரத்தில், பதவிலிருந்து அகற்றப்பட்ட ஷாவின் மகனான Reza Pahlaviக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினர்.
ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஷாவின் மகனான Reza Pahlavi, தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |