சர்வதேச அணிக்கு திரும்பும் பிரபல கிரிக்கெட் வீரர்! பாலியல் குற்றவாளியை சேர்க்க கூடாது என ஆர்ப்பாட்டம்
ரசிகையை வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சந்தீப் லமிச்சானேவை கிரிக்கெட் பயிற்சி முகாமில் சேர்க்க கூடாது என கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சந்தீப் லமிச்சானே
நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் சந்தீப் லமிச்சானே. இவர் மீது 17 வயது டீன்-ஏஜ் சிறுமி ஒருவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் பாலியல் வன்கொடுமை புகார் கூறினார்.
அதில், நான் சந்தீப்பின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன்முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார் காத்மாண்டு ஹொட்டல் ஒன்றில் தம்மை சந்தீப் ரூமுக்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தன்னை 2 முறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார் என்றும் அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார்.
IPL
புகார் அளித்த 2 நாட்களுக்கு பின் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதே நாளில் அவரை நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. இதன்பின் சந்தீப் கைது செய்யப்பட்டார்.
மக்கள் எதிர்ப்பு
இந்நிலையில் சந்தீப் மீது பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்டு உத்தரவை நீக்குவது என சமீபத்தில் நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பு முடிவு செய்து 4 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாட அவரை அனுமதித்தது. இதற்கான பயிற்சியில் சந்தீப் கலந்து கொள்வார் என கூறப்பட்டிருந்தது.
இதற்கு நேபாளத்தில் பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, பாலியல் வழக்கில் குற்றவாளியான சந்தீப்பை கிரிக்கெட் பயிற்சி முகாமில் சேர்க்க கூடாது என கோரி காத்மாண்டு நகரில் போராட்டம் நடத்தப்பட்டது. சந்தீப் தற்போது ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nepal | Demonstration held in Kathmandu against the induction of rape-accused cricketer Sandeep Lamichhane in the training camp. pic.twitter.com/X2gG2yvv9R
— ANI (@ANI) February 5, 2023

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.