ரயிலை தீ வைத்து கொளுத்திய மக்கள்! இந்திய அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு
இந்திய அரசு அறிவித்து புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் மக்கள் ரயிலை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவம் தொடர்பில் அக்னிபாத் எனும் புதிய திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு மட்டுமே பணியாற்ற முடியும். மாதாந்திர ஊதியம் இவர்களுக்கு வழங்கப்படும். ஆனால் இந்த திட்டத்தின்படி சேரும் ராணுவ வீரர்களுக்கு, பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது.
பணிக்காலம் முடிந்ததும் சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பீகாரில் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
#Bihar | A passenger train was set ablaze at Chhapra in Saran district as protests against the Agnipath scheme for short-term induction of personnel in the armed forces escalated
— Hindustan Times (@htTweets) June 16, 2022
Read https://t.co/lqlRYn2WuL pic.twitter.com/rAWdRsMmX8
அம்மாநிலத்தில் நேற்று போராட்டத்தில் இறங்கிய இளைஞர்கள், இரண்டாவது நாளான இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
நவாடா பகுதியில் வாகனங்களின் டயர்கள் எரிக்கப்பட்டு போராட்டம் பெரியளவில் வெடித்தது. இந்த நிலையில் போராட்டத்தின் உச்சமாக ரயிலை தீ வைத்து கொழுத்தியுள்ளனர். இதனால் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளதால் பீகாரில் பதற்றம் நீடிக்கிறது.