இது பாகிஸ்தானின் பகுதி இல்லை; இந்தியாவின் உதவியை நாடுவோம் - POK மக்கள் எச்சரிக்கை
அத்தியாவசிய பொருட்கள் மீதான தடை தொடர்ந்தால் இந்தியாவின் உதவியை நாடுவோம் POK மக்கள் எச்சரித்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்
பாகிஸ்தானின் ஆளுகையின் கீழ் வரும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் பகுதியில் உள்ள மக்கள், விலைவாசி உயர்வு, அரசின் அடக்குமுறை, நிர்வாகப் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமூக ஆர்வலர் சர்தார் அமன் கான் உள்ளிட்ட உள்ளூர் தலைவர்களின் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த போராட்டம் 23வது நாளை எட்டியுள்ளது.
ஜூன் 9 முதல், கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LoC) அருகே ஒரு தனி தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கும் பாகிஸ்தான் அரசு, ஜூன் 5 ஆம் திகதி முதல் இணைய சேவையை துண்டித்துள்ளது. மேலும், 2 வாரங்களாக அந்த பகுதிக்கு செல்லும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தடை செய்துள்ளது.
இதனையடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவின் உதவியை நாடுவோம் என எச்சரித்துள்ளனர்.
இந்தியாவின் உதவியை நாடுவோம்
ராவலகோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற தொடர் போராட்டத்தில் பேசிய சர்தார் அமன் கான், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி அல்ல. பாகிஸ்தானுக்கு தான் நாங்கள் தேவை. எங்களுக்கு பாகிஸ்தான் தேவை இல்லை.

அத்தியாவசியப் பொருட்களை அரசாங்கம் தொடர்ந்து தடுத்தால், தங்கள் பிழைப்பிற்காக மாற்று வழிகளைக் கண்டுபிடிப்போம்.
*RAWALAKOT ROARS:* "PoJK Is Not Part of Pakistan" Thousands defy Islamabad. Sit-in at LoC since 9 June. Aman Khan: "If Pakistan blocks food, PoK's borders could open. Islamabad will beg PoK to stay." @CMShehbaz oppression has consequences.
— 🇮🇳Bhartiyavibhooti🇮🇳 (@Bhartiyavibhoti) June 30, 2026
@UN @POTUS @narendramodi… pic.twitter.com/GhI0XWjwDk
உதவிக்காக தேவைப்பட்டால் இந்தியாவை நாடுவோம். அவ்வாறு செய்வது பிராந்தியத்தின் அரசியல் சூழலை மாற்றி, இஸ்லாமாபாத் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும்." என தெரிவித்துள்ளார்.
பகல்ஹாம் தாக்குதலுக்குப் பின்னர், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக இந்தியா மீது போர் தொடுப்போம், கைகளை வெட்டுவோம் என மிரட்டல் விடுத்தது வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |