பாரிஸ் கலவரக்காரர்களின் கொடுஞ்செயல்... நூலிழையில் உயிர் தப்பிய நகர மேயரின் குடும்பம்
தெற்கு பாரிஸ் பகுதி நகர மேயரை படுகொலை செய்ய கலவரக்காரர்கள் நடத்திய முயற்சி தோல்வியில் முடிந்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்த குடும்பத்தையும் படுகொலை
பிரான்சில் 17 வயதான நஹெல் என்ற இளைஞரின் கொடூர மரணத்தைத் தொடர்ந்து பாரிஸ் மற்றும் பிரான்ஸ் முழுவதும் உள்ள நகரங்கள் ஐந்தாவது நாளாக கலவரம் மற்றும் வன்முறையை எதிர்கொண்டு வருகிறது.
@AP
இந்த நிலையில், அதிர்ச்சி சம்பவமாக வாகனம் ஒன்றை நெருப்பு வைத்து, நகர மேயர் ஒருவரின் குடியிருப்பை இலக்கு வைத்து, மொத்த குடும்பத்தையும் படுகொலை செய்ய கலவரக்காரர்கள் முயன்றுள்ளனர்.
இளைஞர் நஹெல் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் தொடங்கி, பாரிஸ் மற்றும் பிரான்சின் பல நகரங்களில் கலவரங்கள் நீடித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்தில் பொலிசாரால் வாகனத்துடன் தடுத்து நிறுத்தப்பட்ட நஹெல், மார்பில் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
@epa
அந்த காணொளியானது வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்புடைய அதிகாரி கைது செய்யப்பட்டு, விசாரணையை எதிர்கொள்கிறார். இதனிடையே, இளைஞர் நஹெலின் பாட்டி நாதியா தெரிவிக்கையில், நஹெலின் பெயரில் பிரான்ஸ் நாடு வன்முறையில் சிக்கிக்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை.
நஹெல் பெயரில் சிலர் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். தயவு செய்து, பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதை கைவிடுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் தான், L'Haÿ-les-Roses நகர மேயர் Vincent Jeanbrun தெரிவிக்கையில்,
@rex
வன்முறையின் உச்சகட்டம்
கலவரத்தில் ஈடுபடுவோர் தமது குடும்பத்தை படுகொலை செய்ய முயன்றனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் தமது பிள்ளைகளில் ஒருவரும் மனைவியும் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கார் ஒன்றில் தமது குடியிருப்பை மோதி சேதப்படுத்தியதாகவும், பின்னர் அந்த காருக்கு நெருப்பு வைத்ததாகவும் மேயர் தெரிவித்துள்ளார். இது திட்டமிட்ட படுகொலை முயற்சி என குறிப்பிட்டுள்ள அவர், வன்முறையின் உச்சகட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எனது குடும்பத்தை கவனிப்பதே இன்று எனது முன்னுரிமை என்றால், குடியரசைப் பாதுகாப்பதற்கும் சேவை செய்வதற்கும் எனது உறுதிப்பாடு முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |