இத்தாலியில் டெல் அவிவ் விளையாட எதிர்ப்பு: வெடித்த வன்முறை..ரொக்கெட்டுகளை வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
இத்தாலியில் இஸ்ரேலிய கூடைப்பந்து அணி விளையாட கிளம்பிய எதிர்ப்பு வன்முறையாக மாறியது.
இஸ்ரேலுக்கு எதிர்ப்பு
காஸாவில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடுமையான இஸ்ரேல் கண்டனங்களை சந்தித்து வருகிறது.
விமர்சகர்கள் பலரும் சர்வதேச கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் இருந்து அந்நாட்டை விலக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், இத்தாலி நாட்டிலும் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இஸ்ரேலின் டெல் அவிவ் கூடைப்பந்து அணி, யூரோ லீக் போட்டியில் விளையாட எதிர்ப்பு கிளம்பியது.
ரொக்கெட் பட்டாசுகளை வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
போலோக்னாவின் தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் அந்த அணிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது.
இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது ரொக்கெட் பட்டாசுகளை வீசினர். பதிலுக்கு பொலிஸார் கூட்டத்தை கலைக்க எரிவாயுவை வீசுவதையும், தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் கூடைப்பந்து போட்டி வெள்ளிக்கிழமை இரவு தொடர்ந்தது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |