போலந்தில் வித்தியாசமான முறையில் நடத்தப்பட்ட போராட்டம்: வீடியோ காட்சிகள்!
உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை எதிர்த்து போலந்து தலைநகர் வார்சா-வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடி வித்தியாசமான முறையில் தரையில் படுத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
உக்ரைனில் நிலவும் கடுமையான போர் பதற்றத்திற்கு மத்தியில், ரஷ்யாவின் தீவிர தாக்குதலில் உக்ரைன் பொதுமக்கள் உயிரிழக்கும் அவலநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஐரோப்பிய நாட்டின் கிழக்கு பகுதிகளில் படைகளை அதிகரிப்பது தொடர்பாக கலந்து ஆலோசிப்பதற்காகவும், உக்ரைனில் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான செயல்முறைகளை கேட்டறிவதற்காகவும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று (மார்ச் 25ம் திகதி) போலந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
Hundreds of demonstrators in #Warsaw, #Poland, who condemn the #Russian war against #Ukraine, laid down on the ground in a symbolic show depicting war victims. pic.twitter.com/8qxyfGyafP
— Victor Kovalenko (@MrKovalenko) March 26, 2022
அதேவேளையில், நேற்று (மார்ச் 25ம் திகதி) போலந்து நாட்டின் தலைநகர் வார்சா-வில், உக்ரைனில் உள்ள பொதுமக்கள் மீது ரஷ்யா நடத்திவரும் கொலைவெறி தாக்குதலை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வித்தியாசமான முறையில் தரையில் படுத்து ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது பேசிய போராட்டக்காரர் ஒருவர், "நாங்கள் இறந்து கொண்டு இருக்கும்போது நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறீர்" என உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.