பிரித்தானிய மன்னர் சார்லஸ் பிரான்சுக்கு வந்தால்... போராட்டக்காரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரான்சில் போராட்டம் நடைபெறும் நேரத்தில் பிரித்தானிய மன்னர் சார்லஸ் அங்கு வருகைபுரிந்தால் ஏற்படும் பின்விளைவுகளுக்குத் தாங்கள் பொறுப்பல்ல என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது பிரெஞ்சு தொழிலாளர்கள் யூனியன் ஒன்று.
பிரான்சுக்கு வருகைபுரியும் மன்னர் சார்லஸ்
பிரித்தானிய மன்னர் சார்லசும் ராணி கமீலாவும், இம்மாதம் 26ஆம் திகதி, பிரான்சுக்கு அரசு முறை பயணமாக வருகை புரிய இருக்கிறார்கள்.
ராஜ குடும்பம் மீது அக்கறையும் மரியாதையும் கொண்டவர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறைந்தபோது மேக்ரான் உணர்ச்சிபூர்வமாக மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்திய விடயம் பெருமளவில் புகழ்ச்சிக்குள்ளானது.
Credit: Getty
போராட்ட நேரத்தில் மன்னர் வருகை குறித்து எச்சரிக்கை
தற்போது பிரான்சில், ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பிலான சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்த நேரத்தில் மன்னர் சார்லஸ் பிரான்சுக்கு வருகைபுரிய இருப்பதால், பிரான்சில் ஆர்ப்பாட்டங்களை ஆதரிப்போர் தரப்பிலிருந்து சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி அரசியல்வாதியான Olivier Besancenot என்பவர், நாங்கள் சார்லசை வேலைநிறுத்தம் மூலம் வரவேற்கப்போகிறோம் என்று கூறியுள்ளார்.
Credit: Rex
தொழிலாளர்கள் யூனியன் ஒன்றைச் சேர்ந்த Pascal Mesgueni என்பவர், மன்னரால் ட்ராமில் பயணிக்கமுடியாது என்பது கிட்டத்தட்ட உண்மையான விடயம் என்று கூறியுள்ளார்.
அத்துடன், மன்னருடைய ட்ராமை இயக்க பிரான்சில் யாரும் இருக்கமாட்டார்கள், முன்னும் பின்னும் ட்ராமை ஆட்கள் வழிமறிப்பார்கள் என்று கூறியுள்ளதுடன், ஒருபடி மேலே போய், பொருட்கள் வீசப்படுவதால் ஏற்படும் அபாயத்தையும் மறந்துவிடவேண்டாம் என எச்சரித்துள்ளார்.
ஆக, மன்னருடைய பிரான்ஸ் பயணம் திட்டமிட்டபடி பிரச்சினை எதுவும் இல்லாமல் நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
Credit: AFP