ரியல் மாட்ரிட்டை அலறவிட்ட PSG! ஃபிபா கிளப் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் செல்ஸியுடன் மோதல்
ஃபிபா கிளப் உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் செல்ஸி மற்றும் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிகள் மோதுகின்றன.
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன்
அமெரிக்காவில் கிளப் கால்பந்து அணிகள் மோதும் ஃபிபா கிளப் உலகக்கிண்ணத் தொடர் நடந்து வருகிறது.
இன்று நடந்த அரையிறுதியில் ரியல் மாட்ரிட் (Real Madrid) மற்றும் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் PSG வீரர் ஃபேபியன் ரூய்ஸும், 9வது நிமிடத்தில் ஓஸ்மானேயும் கோல் அடித்தனர்.
அதனைத் தொடர்ந்து 24வது நிமிடத்தில் ஃபேபியன் ரூய்ஸ் (Fabian Ruiz) மற்றொரு கோல் அடித்தார்.
ஆனால், ரியல் மாட்ரிட் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணிகள்
மறுமுனையில் PSG வீரர் ராமோஸ் (Ramos) 87வது நிமிடத்தில் கோல் அடித்தார். இறுதியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் (Paris Saint-Germain) அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிடை வீழ்த்தியது.
முன்னதாக, முதல் அரையிறுதியில் செல்ஸி (Chelsea) 2-0 என்ற கணக்கில் ஃப்ளூமினென்ஸ் அணியை வென்றது.
இதன்மூலம் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் செல்ஸி அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இவ்விரு அணிகளும் 14ஆம் திகதி மோத உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |