PSG அணி அதிர்ச்சித் தோல்வி: சர்வதேச வீரர்கள் திரும்பிய பிறகே..பயிற்சியாளரின் காரணம்
மல்லோர்கா அணிக்கு எதிரான போட்டியில் PSG அணி படுதோல்வி அடைந்தது.
கிளப் நட்பு போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 0-3 என்ற கோல் கணக்கில் மல்லோர்காவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
மல்லோர்கா வெற்றி
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் (PSG) மற்றும் மல்லோர்கா அணிகளுக்கு இடையிலான கிளப் நட்பு போட்டி ஸ்பெயினியில் நடந்தது.
ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் மல்லோர்காவின் ஸிடோ லுவும்போ கோல் அடித்தார். அடுத்த 19 நிமிடங்களில் ஜென் விர்கிலி கோல் அடித்தார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து PSG அணி மீள்வதற்குள் 51வது ஆன்டோனியோ ரெய்லோ (Antonio Raillo) கோல் அடித்தார்.
இறுதிவரை PSG அணியினரால் கோல் அடிக்க முடியாததால், மல்லோர்கா 3-0 என்ற கோல் வெற்றி பெற்று அதிர்ச்சி கொடுத்தது.
பயிற்சியாளர்
தோல்வி குறித்து பேசிய PSG பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்யூ (Luis Enrique), "இது எங்கள் உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான ஒரு போட்டி. இதற்கு ஒரு சரியான பகுப்பாய்வை வழங்குவது கடினம். முதல் பாதியில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டதாக நினைக்கிறேன்.

ஆனால், இரண்டாவது கோலை விட்டுக்கொடுத்தபோது நாங்கள் செய்த தவறு ஆட்டத்தை எங்களுக்கு கடினமாக்கியது. இருப்பினும், நான் பார்த்த விடயங்களில் மகிழ்ச்சியடைகிறேன்; அகாடமி வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டதை காண முடிந்தது. இது நாங்கள் விரும்பிய முடிவு அல்ல; ஆனால் கால்பந்தில் இது இயல்பான ஒன்றுதான். PSG அணிக்கு எதிராக விளையாடுவது மற்ற அணிகளுக்கு ஒரு உந்துதலாக அமைகிறது, அது இயல்பானதே.
இது எங்கள் பருவக்காலத்திற்கு முந்தைய பயிற்சியின் முதல் வாரம்; அணியில் பல அகாடமி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் திரும்பிய பிறகே எங்கள் அணியின் உண்மையான நிலையை எங்களால் முழுமையாக மதிப்பிட முடியும்" என தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |