PSG அணி மேலாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் மகனுடன் கைது: வெளிவரும் பின்னணி
அணி வீரர்களிடம் பாகுபாடு காட்டியதாக கூறி எழுந்த புகாரின் அடிப்படையில் PSG அணியின் மேலாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் மகனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இனவாத, மதவாத பாகுபாடு
கடந்த 2021 மற்றும் 2022 கால்பந்து தொடரில் நைஸ் அணிக்காக பணியாற்றியுள்ளார் கிறிஸ்டோஃப் கால்டியர். அப்போது அணி வீரர்களிடையே இனவாத, மதவாத பாகுபாடு காட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
@getty
இந்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் விசாரணை துவங்கியுள்ளனர். 2023ல் மட்டும் PSG அணி 10 தோல்விகளை எதிர்கொண்ட நிலையில், அணியின் கத்தார் உரிமையாளர்கள் கிறிஸ்டோஃப் கால்டியரை பொறுப்பில் இருந்து நீக்கும் முடிவுக்கு வந்தனர்.
நைஸ் அணியின் முன்னாள் இயக்குனர் Julien Fournier அனுப்பிய மின் அஞ்சலில், நைஸ் அணியின் பல்வேறு வீரர்கள் மீது கிறிஸ்டோஃப் கால்டியர் இனவாத மற்றும் மதரீதியான கருத்துகளை பதிவு செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அனைத்தும் இட்டுக்கட்டிய கதை
மட்டுமின்றி, நைஸ் அணியில் இஸ்லாமிய வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை தடுக்க வேண்டும் எனவும், அதிக எண்ணிக்கையில் அவர்களை உட்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் இட்டுக்கட்டிய கதை எனவும், இந்த விவகாரம் தமக்கு அதிர்ச்சியை அளிப்பதாகவும் கிறிஸ்டோஃப் கால்டியர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், தொடர்புடைய தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர் மீது இழப்பீடு கோரி தனிப்பட்ட முறையில் வழக்கும் தொடர்ந்தார். இந்த நிலையில் தான் தற்போது விசாரணை நிமித்தம் கிறிஸ்டோஃப் கால்டியர் மற்றும் அவரது மகன் ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |