PSG வெற்றி, பாரிஸில் வெடித்த வன்முறை: 780 பேர் கைது செய்த பிரான்ஸ் பொலிஸார்
ஐரோப்பாவின் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி(PSG) வெற்றி பெற்றதை அடுத்து பிரான்ஸில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டம் வன்முறையில் முடிந்தது.
PSG வெற்றி
ஐரோப்பாவின் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஆர்சனல் அணியில் மற்றும் பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(PSG) அணிகள் மோதின.
ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் தலா 1-1 என்ற சமன் நிலையில் இருந்தன. ஆனால் பெனால்டி முறையில் பிஎஸ்ஜி 4-3 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
🚨 FRANCE HAS BEEN INVADED and predominantly 3rd worlders are WREAKING HAVOC!
— Eric Daugherty (@EricLDaugh) May 31, 2026
The entire city burned, mass businesses looted, and the usual suspects carried it out.
NEVER allow this to come to America!
Law, order and our culture must be protected 🇺🇸pic.twitter.com/DLgIHhzbWQ
இந்த வெற்றியை தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் சில பகுதிகளில் இந்த கொண்டாட்டங்கள் வன்முறையாக வெடித்தது.
குறிப்பாக தலைநகர் பாரிஸின் சாம்ப்ஸ் -எலிசிஸ் தெருவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட இருந்த நிலையில் பொலிஸாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
வன்முறை மற்றும் கைது நடவடிக்கை
இதையடுத்து நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன் நுனெஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் வழங்கிய தகவலில், நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்ட 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் பாரிஸில் மட்டும் கிட்டத்தட்ட 480 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த மோதலில் கிட்டத்தட்ட 57 காவல்துறையினர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் தொடரும் நிலையில் பாதுகாப்பிற்காக கூடுதல் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |