PSL 2025; விக்கெட் எடுத்த உற்சாகத்தில் சக வீரரை தாக்கிய பந்துவீச்சாளர்
பாகிஸ்தானில், கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி தொடங்கி பாகிஸ்தான் சூப்பர் லீக் நடைபெற்று வருகிறது.
முல்தான் சுல்தான்ஸ் வெற்றி
நேற்று நடைபெற்ற 12வது லீக் போட்டியில், லாகூர் கலந்தர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற, முல்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
20 ஓவர் முடிவில், 5 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்கள் எடுத்தது முல்தான் சுல்தான்ஸ். முல்தான் அணி சார்பில் அதிகபட்சமாக, யாசிர் கான் 44 பந்துகளில் 87 ஓட்டங்கள் எடுத்தார்.
229 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து, 195 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
லாகூர் அணி சார்பில் அதிகபட்சமாக, சிக்கந்தர் ராசா 50 ஓட்டங்கள் எடுத்தார். முல்தான் சுல்தான்ஸ் சார்பில் உபைத் ஷா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதன் மூலம், முல்தான் சுல்தான்ஸ் 33 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சுருண்டு விழுந்த உஸ்மான்
லாகூர் அணி துடுப்பாட்டம் ஆடும் போது, 15வது ஓவரை வீசிய உபைத் ஷா, 23 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்திருந்த சாம் பில்லிங்ஸை ஆட்டமிழக்க செய்வார்.
விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தில் உபைத் ஷா, சக வீரரான விக்கெட் கீப்பர் உஸ்மான் கானின் கையை தட்டுவதற்கு பதிலாக, பலமாக தலையில் அடித்தார்.
இதில் நிலைகுலைந்த உஸ்மான் கான், மைதானத்தில் சுருண்டு கீழே விழுவார். உடனடியாக உஸ்மான் கானுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
In the Heat of Celebration. Ubaid Shah kis baat ka gusa nikaal rahi thi . #MSvsLQ #MSvLQ #HBLPSL10 #HBLPSLX #cricket #PSL2025 #PSL10 #PSLX #ubaidshah pic.twitter.com/607w1ZCMvV
— TajalNoor (@tajal_noor) April 22, 2025
உஸ்மான் கானுக்கு வலி குறைந்து, சரியான பின்னர், ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |