ஃபிஃபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள்: வெற்றி யாருக்கு? ஆவிகளுடன் பேசும் பெண் கணிப்பு
கால்பந்து ரசிகர்களிடையே கால்பந்து காய்ச்சல் பரவிவரும் நிலையில், உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றப்போவது யார் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.

இந்நிலையில், ஃபிஃபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் வெற்றி யாருக்கு என்பது குறித்து ஆவிகளுடன் பேசும் பெண்ணொருவர் தனது கணிப்பைத் தெரிவித்துள்ளார்.
ஆவிகளுடன் பேசும் பெண் கணிப்பு
ஆவிகளுடன் பேசும் பெண்ணான ஏஞ்சலா (Angela Kuschel), நேரடியாக இந்த நாடு உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றும் என்று கூறாமல், குரோஷியாவையும் பராகுவேவையும் குறைத்து எடைபோடவேண்டாம் என மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரேசில் போன்ற ஒரு நாட்டை, காயம் போன்ற ஒரு பிரச்சினை பாதிக்க இருப்பதாகவும் ஏஞ்சலா தெரிவித்துள்ளார்.
அதேபோல, வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பிரேசில் நாட்டவரான ஏதோஸ் சலோமேயும் ஃபிஃபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் வெற்றி யாருக்கு என்பது குறித்து நேரடியாக பதிலளிக்காமல் நெருப்பின் நிறம் கொண்ட, ஆழ்ந்த, ஆதிக்கம் செலுத்தும் நிறம் கொண்ட அணி ஒன்று வெற்றி பெறும் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள அணி, ஸ்பெயின், போர்ச்சுகல் அல்லது இங்கிலாந்தாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |