2025இல் ஹரி மேகன் தம்பதி விவாகரத்து, உக்ரைனுக்கு புதிய தலைவர்... ஆவிகளுடன் பேசும் பெண் கணிப்பு
ட்ரம்ப் கொலை முயற்சி, பாரீஸ், கலிபோர்னியா, பாஸ்டன் தாக்குதல்கள் போன்ற விடயங்களை துல்லியமாக கணித்த, ஆவிகளுடன் பேசும் பெண்ணொருவர் 2025ஆம் ஆண்டுக்கான சில அதிரவைக்கும் விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
வாய் பிளக்கவைக்கும் சம்பவங்கள்
2025இல், ஆச்சரியம் அல்லது அதிர்ச்சியில் வாயை பிளக்கவைக்கும் சம்பவங்கள் சில நடக்கும் என கணித்துள்ளார் ஆவிகளுடன் பேசும் அமெரிக்கப் பெண்ணான கெல்லி (Kelle Sutliff ).
ஹரி, மேகன் விவாகரத்து
2024ஆம் ஆண்டு ராஜ குடும்பத்துக்கு மோசமானதாக இருந்தது போலவே, 2025இலும் சில மோசமான நிகழ்வுகள் நிகழும் என்று கணித்துள்ளார் கெல்லி.
முதலில், மன்னர் சார்லஸ், அவரது மனைவியான கமீலா, இந்த இரண்டு பெயர்கள் மீதும் கவனம் செலுத்துங்கள் என்று கூறும் கெல்லி, 2025இல் ஹரி விவாகரத்து செய்யப்படுவார் என தான் நம்புவதாகத் தெரிவிக்கிறார்.
உக்ரைன் ஜனாதிபதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
உக்ரைன் ரஷ்யப் போரில் உக்ரைனுக்கு பெருமளவில் ஆயுதங்களும் பணமும் கொடுத்து அமெரிக்க தரப்பு தூண்டிவிட்டது.
அது இனி மாறப்போகிறது, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு இனி முன்போல் நிதி உதவி கிடைக்காது என்கிறார் கெல்லி.
அத்துடன், 2025இல், உக்ரைன் நாட்டின் தலைமையிலும் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார் அவர்.
புற்றுநோய் சிகிச்சையில் திருப்புமுனை
2025ஆம் ஆண்டில், புற்றுநோய் சிகிச்சையில் திருப்புமுனை ஒன்று நடைபெறும்.
புற்றுநோயை குணமாக்க புதியவகை சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்படும் என்று கூறியுள்ளார் கெல்லி.
போரும் அமைதியும்
போர்கள் தொடர்பில் ஜூன் மாதம் முதல் ஆகத்து மாதம் வரையிலான காலகட்டத்தில் ஏதோ நல்லது நடக்கப்போகிறது.
செப்டம்பரில் யாரோ ஒருவரின் முன்னெடுப்பின் பேரில் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே நடந்து வரும் போர்கள், ஒரு புதிய போர் என பல போர்களை காண்கிறேன் என்று கூறியுள்ள கெல்லி, 2026இல் அமைதி ஏற்படுவதையும் காண்கிறேன் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |