2025இல் கோவிடைவிட மோசமான ஒரு வைரஸ்: திகில் கிளப்பும் ஆவிகளுடன் பேசும் நபர்கள்
2025ஆம் ஆண்டில், கோவிடைவிட மோசமான வைரஸ் ஒன்று கொள்ளைநோயை உருவாக்கும் என்று கூறி திகில் கிளப்பியுள்ளார்கள் ஆவிகளுடன் பேசும் நபர்கள்.
2025இல் பல பயங்கர விடயங்கள்
கோவிடின் பாதிப்புகளிலிருந்து இன்னமும் உலகம் முழுமையாக விடுபடாத நிலையில், 2025ஆம் ஆண்டில், கோவிடைவிட மோசமான ஒரு கொள்ளை நோய் உலகைத் தாக்கும் என்று கூறியுள்ளது, ஆவிகளுடன் பேசுவோர், ஜோதிடர்கள் மற்றும் குறி சொல்லுவோரைக் கொண்ட குழு ஒன்று.
அதுமட்டுமின்றி பல பயங்கர விடயங்கள் 2025இல் நடக்கும் என்றும் கணித்துள்ளார்கள் அவர்கள்.
ஐரோப்பாவில் அரசியல் மாற்றங்கள்
ஜேர்மனி, ஸ்பெயின், போலந்து முதலான பல நாடுகளில் 2025ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஜோதிடக்கலையின் அடிப்படையில் அந்த நாடுகளில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ இருப்பதாக தெரிவித்துள்ளனர் அந்த எதிர்காலத்தைக் கணிக்கும் குழுவினர்.
கோவிடைவிட மோசமான ஒரு வைரஸ்
Tarot card என்னும் அட்டைகளைக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் சிலர், 2025இல் கோவிடைவிட மோசமான ஒரு கொள்ளைநோய் உலகைத் தாக்கும் என்று கூறியுள்ளார்கள்.
அத்துடன், மார்ச் 14ஆம் திகதி ஒரு முழு சந்திர கிரகணமும், செப்டம்பர் 21ஆம் திகதி பகுதி சூரிய கிரகணமும் ஏற்படும் என்றும், அவை முடிவுகளுக்கும், மாற்றங்களை ஏற்படுத்தும் துவக்கங்களுக்கும் அடையாளம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
AIயின் வளர்ச்சி
ஜோதிடக்கலையின்படி, AIயின் வளர்ச்சி பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும், அதனால், அதைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் என்றும் அந்த குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
விண்வெளி கண்டுபிடிப்புகள்
ஆவிகளுடன் பேசுபவர்கள், 2025ஆம் ஆண்டில், விண்வெளி தொடர்பான பல முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகள் பெரிய அளவில் துவங்கும் என்று கூறியுள்ளார்கள்.
அத்துடன், ஜோதிடக்கலையின் அடிப்படையில், சமுதாயம் மற்றும் கலாச்சாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் கணித்துள்ளார்கள் அவர்கள்.
குறிப்பாக, கிறிஸ்தவ மதத்தில் ஒரு பெரிய மறுமலர்ச்சி, எழுச்சி ஏற்படும் என்றும், உணவு, உடை மற்றும் கலாச்சாரத்தில், பாரம்பரிய கொள்கைகள் மீண்டும் திரும்பும் என்றும் அவர்கள் கணித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |