பப்ஜி காதலனை சந்திக்க 4 குழந்தைகளுடன் வந்த பெண்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு
உத்தரபிரதேசத்தை சேர்ந்த பப்ஜி காதலனுடன் வாழ 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்ணுக்கு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியுள்ளது.
பப்ஜி மூலம் மலர்ந்த காதல்
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா நகரை சேர்ந்த சச்சின் என்ற இளைஞருக்கும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர்(Seema Ghulam Haider) என்ற பெண்ணுக்கும் இடையே பப்ஜி(PubG Mobile) விளையாட்டின் மூலம் காதல் மலர்ந்துள்ளது.
இதையடுத்து திருமணமான சீமா தன்னுடைய 4 குழந்தைகளுடன் காதலனை பார்ப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டுள்ளார்.
பின்னர் நேபாளத்தில் சச்சினும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமாவும் சந்தித்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த அவர்கள், கிரேட்டர் நொய்டா பகுதியில் சீமாவுடைய 4 குழந்தைகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
இதனிடையே நொய்டாவின் ரபுபுரா பகுதியில் சந்தேகத்திற்குரிய பெண் வசித்து வருவதாக உளவுத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து, சச்சின், சச்சின் தந்தை, சீமா, அவருடைய நான்கு குழந்தைகள் ஆகிய 7 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
இந்நிலையில் உத்தரபிரதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 7 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து நீதிமன்றம் அவர்கள் 7 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணையின் போது சச்சின் நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளோம், எங்களை இந்தியாவில் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |