எந்நேரமும் பப்ஜி.. பெற்றோர் கண்டித்ததால் மாணவர் விபரீத முடிவு
எந்நேரமும் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த மாணவரை படிக்க வேண்டும் என்று பெற்றோர் அறிவுறுத்தியதால், மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படிக்க வேண்டும் என தந்தை அறிவுறுத்தல்
இந்திய மாநிலம் தெலங்கானா கரீம் நகர் ருக்மாபூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி படிப்பை தொடங்குவதற்கு பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார். ஆனால், கல்லூரி வகுப்புகள் இன்னும் தொடங்கவில்லை.
இதனால், ரமேஷ் எந்த நேரமும் வீட்டில் இருந்து பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சம்பவம் நடந்த நாளும், மாணவர் வழக்கம் போல பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார்.
அதனை பார்த்த ரமேஷின் தந்தையான அஞ்சையா, "பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்து விட்டாய். இன்னும் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருக்கிறாய், விளையாட்டை நிறுத்திவிட்டு படிக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார். பின்பு, அவர் தனது அன்றாட விவசாய வேலைகளை செய்வதற்கு சென்றுள்ளார்.
மாணவர் தற்கொலை
இதனையடுத்து, தந்தை கண்டித்ததால் விரக்தியடைந்த ரமேஷ் தற்கொலை செய்து கொன்டுள்ளார். பின்பு, ரமேஷை பார்த்த அக்கம் பக்கத்தினர், மாணவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், இது தொடர்பாக கரீம் நகர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போதைய காலத்தில், பெற்றோர்கள் திட்டினாலோ, தேர்வில் தோல்வியடைந்தாலோ இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவு சமீப காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால், மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை கொடுப்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |