பப்ஜி காதலனுக்காக எல்லை கடந்து வந்த திருமணமான பெண்! படமாகும் சீமா ஹைதர் Love Story
பப்ஜி காதல் சீமா ஹைதர் மற்றும் சச்சின் காதல் கதை பாலிவுட்டில் படமாக இருக்கிறது.
படமாகிறது சீமா ஹைதர் - சச்சின் மீனா கதை
சில நேரங்களில் கற்பனைக் கதைகளை விட நிஜக் கதைகள் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வகையில் பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் மீனா ஆகியோரின் நாடு கடந்த காதல் பேசுபொருளாகி வருகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதருக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் மீனா மீது காதல் வந்துள்ளது.
பின்பு, இவர் தன்னுடைய குழந்தைகளையும், கணவரையும் விட்டுவிட்டு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து சச்சின் மீனாவுடன் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வந்தார். பின்பு, சீமா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதுமட்டுமில்லாமல், சீமா ஹைதர் பாகிஸ்தானின் உளவாளியாக இருப்பாரோ என்ற அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகின்றன. இவருடைய, இந்த சுவாரஸ்யமான கதையை பாலிவுட்டில் படமாக்க இருக்கிறார்கள். இது தொடர்பாக நடிகர்கள் குறித்த விவரங்களை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
சீமாவுக்கு நடிக்க அழைப்பு
இதனிடையே, சீமாவின் காதல் கதை படமாவது மட்டுமல்லாமல், அவருக்கு வேறொரு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது.
பாலிவுட் தயாரிப்பாளரும், அரசியல் கட்சித் தலைவருமான அமித் ஜானி என்பவர் தான் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்.
சீமாவின் குடும்பம் அன்றாட உணவுக்கே தடுமாறுவதாக பேசப்பட்ட நிலையில் அமித் ஜானி தனது நிறுவனத்தின் கீழ் இயங்கும் மற்றொரு படத்தில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த தயாரிப்பாளர் உதய்ப்பூரில் படுகொலையான கன்னையா லால் சாஹூ என்ற டெய்லரை அடிப்படையாக வைத்தும் படம் ஒன்றை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தில் நடிக்க விடுக்கப்பட்ட அழைப்பை சீமா ஏற்றுக்கொள்வாரா, இல்லையா என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |