காசா போரை நிறுத்த வேண்டும்! இஸ்ரேல் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்
பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இஸ்ரேல் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேள்விக்குறியாகும் பிணைக் கைதிகள் நிலை
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
சமீபத்தில் காசா நகரை முழுவதுமாக கட்டுப்பாட்டில் எடுக்கும் பிரதமர் நெதன்யாகுவின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இந்த முடிவு சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஹமாஸ் பிடியில் 50 பிணைக் கைதிகள் இன்னும் இருக்கும் நிலையில், இதனால் பிணைக் கைதிகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இஸ்ரேலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் ஹமாஸ் பிடியில் இருந்து பிணைக் கைதிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து இஸ்ரேல் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டக்காரர்கள் டயர்களில் தீ வைத்து குவித்தனர் மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இறுதியில் போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |