புடினை படுகொலை செய்ய வேண்டும்! இவர்களால் தான் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும்: பிரபலம் காட்டம்
ரஷ்ய ஜனாதிபதி புடினை படுகொலை செய்ய வேண்டும் என அமெரிக்காவின் மூத்த செனட் அவை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் காட்டமாக கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த பிரச்னை எப்படி முடிவுக்கு வரும்? ரஷ்யாவில் உள்ள எவரேனும் ஒருவர் துணிந்து செயல்பட்டு அவரை கொல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார்.
பின்னர், ட்விட்டரில் அவர், இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்ய மக்களால் மட்டுமே முடியும் என பதிவிட்டுள்ளார்.
ரோமானிய பேரரசின் மன்னனான சீசரை ப்ரூடஸ் கொலை செய்ததை மேற்கொள் காட்டிய அவர், ரஷ்யாவில் ப்ரூடஸ் உள்ளாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 1944ஆம் ஆண்டு, ஹிட்லரை கொல்ல ஜேர்மன் ராணுவ அதிகாரி கர்னல் ஸ்டாஃபென்பெர்க் முயற்சி செய்து தோல்வி அடைந்தார்.
இதுகுறித்து மறைமுகமாக பேசிய அவர், ரஷ்ய ராணுவத்தில் கர்னல் ஸ்டாஃபென்பெர்க் போன்ற நிறைய வெற்றிகரமான அதிகாரிகள் இருந்திருந்தால்? நீங்கள் உங்கள் நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு சிறந்த சேவையைச் செய்து இருப்பீர்கள் என தெரிவித்துள்ளார்.